ஐபோன் 15 ரிலீஸ் ஆனதும் பழைய மாடல்களின் விலையைக் குறைத்த ஆப்பிள் நிறுவனம்!

First Published | Sep 14, 2023, 1:15 PM IST

ஆப்பிள் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து முந்தைய ஐபோன் மாடல்களின் விலையை குறைத்து புதிய விலையை நிர்ணயித்துள்ளது.

Apple iPhone 14 (128GB)

ஆப்பிள் ஐபோன் 14 (128 ஜிபி):  ஐபோன் 14 இன் இந்த மாடல் ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.10,000 விலை குறைக்கப்பட்டு ரூ 69,900 க்குக் கிடைக்கிறது.

Apple iPhone 14 (256GB)

ஆப்பிள் ஐபோன் 14 (256 ஜிபி): ஐபோன் 14 இன் 256ஜிபி மாடல் ரூ.89,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலையும் ரூ.10,000 குறைந்துள்ளது. ரூ.79,900க்கு கிடைக்கிறது.

Tap to resize

Apple iPhone 14 (512GB)

ஆப்பிள் ஐபோன் 14 (512 ஜிபி): ஐபோன் 14 இன் 512ஜிபி மாடல் ரூ.10,000 விலைக் குறைந்து ரூ.99,900 க்கு விற்பனையில் உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.1,09,900 ஆக இருந்தது.

Apple iPhone 14 Plus (128GB)

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி): விலைக் குறைப்புக்கு முன், ரூ.89,900 க்கு விற்கப்பட்டது. இப்போது, ரூ.10,000 ரூபாய் விலைக் குறைப்புக்குப் பிறகு, ரூ.79,900 ரூபாய்க்கு வாங்கலாம்.

Apple iPhone 14 Plus (256GB)

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (256 ஜிபி): ரூ.10,000 விலைக் குறைப்புக்குப் பிறகு, ஐபோன் 14 பிளஸின் 256 ஜிபி மாடல் ரூ.89,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Apple iPhone 14 Plus (512GB)

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (512 ஜிபி): ஐபோன் 14 ப்ளஸின் இந்த மாடல் ரூ.10,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.1,19,900 ஆக இருந்தது, தற்போது ரூ.1,09,900க்கு கிடைக்கிறது.

Apple iPhone 13 (128GB)

ஆப்பிள் ஐபோன் 13 (128 ஜிபி): ஐபோன் 13 இன் 128 ஜிபி மாடல் ரூ.20,000 விலை சரிவைக் கண்டுள்ளது. இப்போது ரூ.59,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Apple iPhone 13 (256GB)

ஆப்பிள் ஐபோன் 13 (256 ஜிபி): ரூ.89,900-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 13 256ஜிபி மாடல் விலை ரூ.20,000 குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.69,900க்கு வாங்கலாம்.

​Apple iPhone 13 (512GB)

ஆப்பிள் ஐபோன் 13 (512 ஜிபி): ஆப்பிள் ஐபோன் 13 இன் 512ஜிபி மாடல் ரூ.1,09,900 லிருந்து ரூ.20,000 விலை வீழ்ச்சி கண்டு ரூ.89,900-க்குக் கிடைக்கிறது.

Apple iPhone 12 (64GB)

ஆப்பிள் ஐபோன் 12 (64 ஜிபி): ரூ.65,900 விலையில் இருந்த ஐபோன் 12 இன் 64ஜிபி மாடலை இப்போது ரூ.48,900க்கு வாங்கலாம். இதன் விலை ரூ.16,910 குறைக்கப்பட்டுள்ளது.

Apple iPhone 12 (256GB)

ஆப்பிள் ஐபோன் 12 (256 ஜிபி): ரூ.80,900க்கு விற்கப்பட்ட ஐபோன் 12 இன் 256ஜிபி மாடலை இப்போது ரூ.64,990க்கு வாங்கலாம். ரூ.15,910 விலைக் குறைக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!