மெர்சலான லுக்கில் அசத்தும் Oppo Find N3 Flip ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 29 இல் ரிலீஸ்! முழு விவரம் இதோ!

First Published | Aug 25, 2023, 5:01 PM IST

ஓப்போ நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Oppo Find N3 Flip மொபைல் மற்றும் Oppo Watch 4 Pro ஸ்மார்ட் வாட்ச் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Oppo Find N3 Flip

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஓப்போ நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Oppo Find N3 Flip மொபைல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கெனவே வெளியான Oppo Find N2 Flip மொபைலைத் தொடர்ந்து இது வெளியாகிறது.

Oppo Find N3 Flip & Oppo Watch 4 Pro

வரவிருக்கும் மடிக்கும் வசதி கொண்ட மொபைலுடன் ஓப்போ வாட்ச் 4 ப்ரோவையும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் Oppo Find N3 Flip மற்றும் Oppo Watch 4 Pro ஆகியவற்றின் படங்கள் பகிரப்பட்டுள்ளன. Oppo Find N3 Flip மொபைல் ஆகஸ்ட் 29 அன்று சீனாவில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்திய நேரப்படி பகல் 11:30 மணிக்கு நடைபெற உள்ளது.

Tap to resize

Oppo Find N3 Flip

Oppo Find N3 Flip இன் படங்களை வைத்து, இந்த மொபைல் Motorola Razr 40 Ultra மற்றும் Samsung Galaxy Z Flip 5 ஆகியவற்றை விட அளவில் சற்று சிறியதாக இருக்கும் எனத் தெரிகிறது. பின்புறத்திலும் ஒரு திரையுடன் கூடிய இந்த மடிப்பு மொபைல், OnePlus மொபைல்களில் உள்ளதைப் போன்ற ட்ரை-ஸ்டேட் ஸ்லைடரைக் கொண்டிருக்கிறது.

Oppo Find N3 Flip

Oppo Find N3 Flip படங்களில் மொபைலின் பின்புற கேமரா அமைப்பு மூன்று கேமராகளைக் கொண்டிருக்கும் எனக் அறியமுடிகிறது. இந்த மொபைலில் 16GB ரேம், மீடியாடெக் பிராசஸர் (MediaTek Dimensity 9200 SoC), 512GB ஸ்டோரேஜ் ஆகியவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 67W வேகமான சார்ஜிங் வசதியுடன் 4300mAh பேட்டரி இருக்கும் எனவும் பிளாக் மற்றும் கோல்டு கலர்களில் விற்பனை செய்யப்படும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், Oppo Find N3 Flip மொபைலின் அம்சங்கள் பற்றி அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

Oppo Find N3 Flip

இதற்கிடையில், கடந்த ஆண்டு வெளியான Oppo Watch 3 Pro ஸ்மார்ட் வாட்ச் வரவேற்பைப் பெற்றதால், அதன் அடுத்த மாடலாக Oppo Watch 4 Pro ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வாட்ச் முந்தைய மாடலைப் போலவே செவ்வக வடிவமைப்பு கொண்டிருக்கிறது. சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. கேஜெட் பிரியர்கள் Oppo Find N3 Flip மற்றும் Oppo Watch 4 Pro இரண்டின் வெளியீட்டையும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

Latest Videos

click me!