ரிலையன்ஸ் ஜியோவின் 7ஆம் ஆண்டு கொண்டாட்டம்! பயனர்களுக்கு 7 சர்ப்ரைஸ் அறிவிப்புகள்!

First Published | Sep 5, 2023, 9:25 PM IST

ரிலையன்ஸ் ஜியோ தனது 7வது ஆண்டு விழாவை வாடிக்கையாளர்களுடன் கொண்டாட, சில ரீசார்ஜ் பிளான்களில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த கூடுதல் டேட்டா வவுச்சர்கள் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30 வரை செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதைப் பற்றிய விரிவான விவரங்களைப் பார்க்கலாம்.

ரூ.299 பிளான்: 7ஜிபி கூடுதல் டேட்டா வவுச்சர்

இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய பலன்களை வழங்குகிறது.

ரூ.749 பிளான்: 14ஜிபி கூடுதல் டேட்டா வவுச்சர்

இந்தத் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய பலன்களை வழங்குகிறது.

Tap to resize

ரூ.2,999 பிளான்: 21ஜிபி கூடுதல் டேட்டா வவுச்சர்

இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

ரூ.2,999 திட்டத்தில் எக்ஸ்ட்ரா வவுச்சர்கள்

ரூ.2999 க்கு ரீசார்ஜ் செய்தால் பல கூடுதல் பலன்கள் கிடைக்கும். AJIO இல் ரூ 200 தள்ளுபடி, நெட்மெட் (NetMet) ஆர்டர்களில் 20% தள்ளுபடி (ரூ 800 வரை), ஸ்விக்கி (Swiggy) ஆர்டர்களில் ரூ.100 தள்ளுபடி, ரிலையன்ஸ் டிஜிட்டலில் 10% தள்ளுபடி, விமான டிக்கெட் புக் செய்வதில் ரூ.1500 வரை தள்ளுபடி, ஹோட்டல்களில் 15% தள்ளுபடி, யாத்ராவில் ரூ.4000 வரை தள்ளுபடி உள்ளிட்ட பல நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

25 நாள் சலுகை காலம்

அனைத்து கூடுதல் டேட்டா வவுச்சர்களும் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 30 வரை 25 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும்.

ஜியோ பயனர்கள் கூடுதல் பலன்களை பெறுவது எப்படி?

ரீசார்ஜ் செய்யும்போது, தகுதியான வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய MyJio கணக்கில் கூடுதல் பலன்கள் உடனடியாகக் கிடைத்துவிடும்.

கூடுதல் டேட்டா

கூடுதல் டேட்டா MyJio செயலியில் தனி டேட்டா வவுச்சராக கிரெடிட் செய்யப்படும். பயனர்கள் தாங்களே அந்த கூடுதல் டேட்டா வவுச்சரை ரிடீம் (Redeem) செய்ய வேண்டும்.

Latest Videos

click me!