Honor 90 5G: ஹானர் 90 5ஜி மொபைலில் 200 MP கேமரா... மெர்சலான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்!

First Published | Sep 16, 2023, 1:18 PM IST

ஹானர் நிறுவனம் இந்தியாவில் Honor 90 5G மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் வழியாக விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல். 200 மெகாபிக்ஸல் கேமராவுடன் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.

​Honor 90 5G Display

ஹானர் 90 5ஜி மொபைலில் 6.7இன்ச் AMOLED டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் கொண்டது.

​Honor 90 5G Camera

மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன. 200MP முதன்மை கேமராவுடன் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமராவும் இருக்கின்றன. இதன் மூலம் தெளிவான 4K வீடியோக்களை எடுக்க முடியும். 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

​Honor 90 5G Processor

ஸ்னாப்டிராகன் (Snapdragon 7 Gen 1) ப்ராசஸர் சிறந்த செயல்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆண்டிராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட MagicOS 7.1 இயங்குதளம் உள்ளது.

​Honor 90 5G Storage

ஹானர் 90 5ஜி மொபைலின் 8GB RAM, 12GB RAM கொண்ட இரண்டு வேரியண்ட்களிலும் 256GB ஸ்டோரேஜ் இருக்கும். 12GB RAM உடன் 512GB ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு மாடலும் உள்ளது.

​Honor 90 5G Battery

ஹானர் 90 5ஜி மொபைல் நாள் முழுவதும் நீடித்து நிற்கும் வகையில் 5000 mAh பேட்டரியுடன் வந்திருக்கிறது. 66W சார்ஜிங் வசதி உள்ளது. USB-C சார்ஜிங் போர்ட் இருக்கிறது.

​Honor 90 5G variants

இந்த மொபைல் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. டைமண்ட் சில்வர், பீக்காக் ப்ளூ, மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் ஆகிய கலர் வேரியண்ட்கள் உள்ளன.

Latest Videos

click me!