மொபைல் மார்க்கெட்டில் படையெடுக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்! அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப் போகுது!

First Published | May 16, 2024, 12:20 PM IST

ஒவ்வொரு மாதமும், இந்தியாவில் பல 5G ஸ்மாட்போன்கள் வெளியாகின்றன. இந்த மே மாதமும் சில பிராண்டுகள் புதிய போன்களை அறிமுகப்படுத்துகின்றன.

5G smartphones

iQOO Z9x, Motorola Edge 50 Fusion ஆகியவை மே 16ஆம் தேதி வரவுள்ளன. Realme GT 6T மே 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். Poco F6 மொபைல் மே 23 ஆம் தேதி இந்தியச் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

iQOO Z9x

iQOO Z9x மே 16ஆம் தேதி அறிமுகமாகிறது. 6.72-இன்ச் 120Hz LCD டிஸ்பிளே, AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இரட்டை பின்புற கேமரா கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OriginOS 4 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் சிப்செட், 12GB LPDDR4X RAM, 256GB வரை நீட்டிக்கக்கூடிய ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி இருக்கிறது.

Tap to resize

Motorola Edge 50 Fusion

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மே 16ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இந்த மொபைல் 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டூயல் ரியர் கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டர் இருக்கக்கூடும். செல்ஃபிக்கு 32 மெகாபிக்சல் கேமரா இருக்கும் என எதிர்பார்க்கலாம். 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியும் இருக்கும் எனத் தெரிகிறது.

Realme GT 6T

ரியல்மீ ஜி.டி. 6டி மே 22ஆம் தேதி அறிமுகமாகிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 5,500mAh பேட்டரி, கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் 6.78-இன்ச் OLED டிஸ்ப்ளே ஆகிய இந்த மொபைலில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று தெரிகிறது. கேராவைப் பொறுத்தவரை OIS தொழில்நுட்பத்துடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் சென்சார், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஆகியவையும் இருக்கலாம்.

Poco F6

போகோ எஃப்6 மே 23ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைல் 20 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வெளியாகும். 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!