Vanitha Net Worth: தங்கத்தட்டில் பிறந்து.. இன்று தன்னந்தனியாக தவிக்கும் வனிதா விஜயகுமார் சொத்து மதிப்பு விவரம்

First Published Sep 16, 2023, 12:56 PM IST

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளாக பிறந்து, மிகவும் செல்லமாக வளர்ந்த வனிதா விஜயகுமார் தற்போது தன்னுடைய உறவினர்கள் யாருடனும் ஒட்டாமல் தன்னந்தனியாக இருக்கும் நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

Actor Vijayakumar:

பழம்பெரும் நடிகர் விஜயகுமார், மேடை நாடகங்களில் நடித்து பிரபலமாகி, பின்னரே தமிழ் திரை உலகில் நடிகராக  அறிமுகமானார். 70-களில் ஹாண்ட்சம் ஹீரோவாகவும், பின்னர் குணச்சித்திர வேடம், வில்லன் என தன்னுடைய நடிப்பு திறமையை எதார்த்தமாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

Vanitha vijayakumar

இவர் மறைந்த பழம்பெரும் நடிகை, மஞ்சுளாவை 1976 ஆம் ஆண்டு.. முதல் மனைவி முத்துகன்னு சம்மதத்துடன், திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் மூவருமே, திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்து பின்னரே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகினர். 

Meena Birthday: மீனாவின் 47-ஆவது பிறந்தநாளை களைகட்ட வைத்த பிரபலங்கள்! வைரலாகும் பர்த்டே செலபிரேஷன் போட்டோஸ்!

Vanitha Divorce:

இவர்களில் நடிகை வனிதா விஜயகுமார்... தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக 1995-ஆம் ஆண்டு வெளியான 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம், உள்ளிட்ட 4 படங்களில் நடித்து முடிந்த கையேடு, தொழிலதிபரும், நடிகருமான ஆகாஷ் என்பவரை காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரே வருடத்தில் இவருக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும் பிறந்தார். பின்னர் ஜோவிகா பிறந்த ஒரே வருடத்தில் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2007-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Vanitha Second Marriage:

விவாகரத்து பெற்ற அதே ஆண்டு வனிதா, ஆனந்த் ஜெயராஜன் என்பவரை, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயனித்தா என்கிற மகள் பிறந்த நிலையில், இரண்டாவது கணவரிடம் இருந்தும்,  2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

SRK :படத்தில் மட்டும் அல்ல.. நிஜத்திலும் ஷாருக்கானுடன் ஓவர் நெருக்கம் காட்டிய தீபிகா படுகோன்! சர்ச்சை போட்டோ!

Vanitha Vijayakumar Trouble:

இதன் பின்னர் தான் வனிதாவின் சொந்த வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்கள் நடந்தேறியது. தன்னுடைய மகன் ஸ்ரீஹரி தன்னுடன் தான் வளர வேண்டும் என்று வனிதா ஆசைப்பட்ட நிலையில், ஆகாஷ் சட்ட போராட்டம் மூலம் தன்னுடைய மகனை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

Vanitha Vijayakumar Succeed Life:

ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையுடன் தான் இருப்பேன் என கூறியதால் இப்படி பட்ட முடிவு எடுக்கப்பட்டது.  இந்த போராட்டத்தில் வனிதாவின் தந்தை முழுக்க முழுக்க ஆகாஷுக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் வனிதா, தந்தைக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்த நிலையில், அங்கிருந்தும் பல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மனதளவில் இதுபோன்ற பிரச்சனைகளால் வனிதா பாதிக்கப்பட்டாலும், மிகவும் தைரியமாக அனைத்தையும் எதிர்கொண்டு இன்று ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளார்.

போனில் டைம் டிராவல் செய்த 'மார்க் ஆண்டனி' பாக்ஸ் ஆபிசில் ஜெயித்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ..!

Vanitha Enter in Biggboss:

இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக வனிதா விஜயகுமார் கலந்து கொண்டது, மீண்டும் இவரை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வைத்தது. அந்த வகையில் தற்போது வனிதா, அடுத்தடுத்த படங்களில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வருகிறார். அதே போல் சில ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வனிதா கடந்த இரண்டு வருடமாக ஃபேஷன் போத்திக் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Vanitha networth:

வினித் விஜயகுமார் தங்க தட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் எந்த சொத்தும் வேண்டாம் என வெளியே வந்து, தன்னுடைய சொந்த உழைப்பால் மகளை நன்றாக வளர்ந்துள்ளது மட்டும் இன்றி, 7.63 கோடி சொத்துக்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. சாதிக்க வேண்டும் என்கிற வெறி எப்போதுமே தோற்று போகாது என்பதற்கு வனிதா மிகப்பெரிய உதாரணம் எனலாம்.

Atlee Net Worth: 36 வயசு... இயக்கியது 5 படம் தான்!! அட்லீயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

click me!