SRK :படத்தில் மட்டும் அல்ல.. நிஜத்திலும் ஷாருக்கானுடன் ஓவர் நெருக்கம் காட்டிய தீபிகா படுகோன்! சர்ச்சை போட்டோ!
'ஜவான்' பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட, தீபிகா படுகோன்... ஷாருக்கானுடன் ரொமான்டிக்காக முத்தம் கொடுப்பது போல் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
Sharukhkhan Starring Jawan Movie
பாலிவுட் பாட்ஷா, ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி, வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படத்தை இயக்குனர் கோலிவுட் பட இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார்.
Jawan Box office:
ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான 'பதான்' இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன், 1000 கோடி வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. எனவே ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.
போனில் டைம் டிராவல் செய்த 'மார்க் ஆண்டனி' பாக்ஸ் ஆபிசில் ஜெயித்தாரா? முதல் நாள் வசூல் விவரம் இதோ..!
Jawan Success Meet:
சமீபத்தில் வெளியான இந்தப் படம், இதுவரை சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா நேற்று மும்பையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் இப்படத்தில் நீடிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனும் கலந்து கொண்டார்.
Deepika padukone in Jawan Success Meet:
வெள்ளை நிற சேலையில் அழகு தேவதை போல் கலந்து கொண்ட இவர், இந்த நிகழ்ச்சியின் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக ஷாருக்கானுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
Deepika kissed Sharukhkhan
இதை பார்த்து ரசிகர்கள்... படத்தின் தான் ரொமான்ஸ் என்றால் இது போன்ற நிகழ்ச்சிகளிலும் உங்கள் ரொமான்ஸ் கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என கமெண்ட் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள். இந்த புகைப்படமும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.