Duplicate PAN Card : வரிவிதிப்பு என்று வரும்போது இன்னும் பல நேரங்களிலும் PAN Card என்பது ஒரு முக்கியமான ஆவணமாக மாறுகின்றது. 18 வயது நிரம்பிய அனைவரும் அதை பெற முடியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை எந்த ஒரு பண பரிவர்த்தனை விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது வங்கி சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் சரி, அங்கு நமது ஆதார் மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டும் தான் முக்கிய பங்கை வகிக்கின்றது. இன்று தொழில்நுட்பத்தைக் கொண்டு மோசடி செய்யும் பலரும், தனிநபர்களின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை தான் குறி வைக்கின்றனர்.
பான் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
இப்படிப்பட்ட சூழலில் நமது பான் கார்டுகளை நாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். ஒருவேளை அந்த பான் கார்டை நாம் தொலைத்து விட்டால் உடனடியாக இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இல்லை என்றால் நமது பான் கார்டை பயன்படுத்தி மோசடி கும்பல்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும்.
undefined
ஆகவே முதலில் உங்கள் பான் கார்டு தொலைந்தால் அது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க மறக்காதிர்கள். சரி பான் கார்டு தொலைந்து விட்டால் (புகார் அளித்த பின்) அல்லது சேதமடைந்து விட்டால் நீங்கள் ஒரு டூப்ளிகேட் பேன் கார்டு பெற்றுக்கொள்ள முடியும்?
டூப்ளிகேட் பான் கார்டு பெற எப்படி விண்ணப்பிப்பது?
TIN-NSDL போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலில் நீங்கள் பார்வையிட வேண்டும். அதில் Change or Correction in PanCard / Re Print of Pan Card in Existing Pan Data என்பதை செலக்ட் செய்து உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து "சப்மிட்" கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சலுக்கு ஒரு டோக்கன் நம்பர் அனுப்பப்படும். இந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டால் பின்னர் நிச்சயம் அது உங்களுக்கு தேவைப்படும். அதன் பிறகு உங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை பயன்படுத்தி அடுத்தடுத்து கேட்கும் தகவல்களை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும். இறுதியில் அனைத்து பணிகள் முடித்து இரு வாரங்களில் உங்கள் பான் கார்டு உங்கள் வீடு தேடி அஞ்சலில் வரும்.
இணையத்தில் இவை அனைத்தையும் செய்ய சிரமம் ஏற்பட்டால், அருகில் உள்ள பிரவுசிங் நிலையம் அல்லது இ சேவை மையத்தை அணுகினால், அங்குள்ளவர்கள் உங்களுக்காக அதை செய்து தருவார்கள்.
இனி Ceiling Fan கிளீன் பண்ண கஷ்டப்பட வேண்டாம்; ரொம்பவே ஈஸி.. டிப்ஸ் இதோ!