Call History : உங்களோட 6 மாத Call History வேண்டுமா? மெயில் மூலம் ஈஸியா தெரிஞ்சுக்கலாம் - எப்படி? முழு விவரம்!

Call History : செல் போன் பயன்படுத்தாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதன் தாக்கம் உலக அளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நமது செல் போனில் உள்ள சில அம்சங்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

How to find a call history of your number for 1 to 6 month duration full details ans

இன்று வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் செல்போனில் எத்தனையோ வசதிகள் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. எந்த ஒரு தகவலாக இருந்தாலும், நம் விரல் நுனியால் அதை தெரிந்துகொள்ள நம்மால் இப்பொழுது முடிகின்றது. அந்த வகையில் நமது செல்போனில் நாம் யாருக்கெல்லாம் பேசியுள்ளோம் என்பதை தெரிந்துகொள்ள இருக்கும் ஒரு வசதி தான் கால் ஹிஸ்டரி. 

பொதுவாக நமது செல்போனிலேயே ஒரு மாத கால அளவிற்கான கால் ஹிஸ்டரி பதிவாகியிருக்கும். ஆனால் சில நேரங்களில் கூடுதல்களாக தகவல்களை நமது கால் ஹிஸ்டரி பற்றி தெரிந்துகொள்ள அவசியம் ஏற்படும். அப்படி ஏற்படும்பொழுது உங்கள் ஃபோனில் இருந்து கடந்த ஆறு மாத காலத்திற்கு யாருக்கெல்லாம் அழைத்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சில வசதிகளை செய்து வைத்துள்ளது. 

இனி Ceiling Fan கிளீன் பண்ண கஷ்டப்பட வேண்டாம்; ரொம்பவே ஈஸி.. டிப்ஸ் இதோ!

வணிக ரீதியான தேவைகளுக்காக அல்லது சொந்த தேவைகளுக்காக இதை பயன்படுத்தலாம், ஆனால் அதற்காக நாம் சற்று மெனக்கெட வேண்டியது அவசியமே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சரி வாருங்கள் அது எப்படி பார்ப்பது என்று பார்க்கலாம்.  

ஏர்டெல் 

ஏர்டெல் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த ஆறு மாத காலத்திற்கான கால் ஹிஸ்டரி பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தங்களது மொபைலில் இருந்து "EPREBILL" என்று டைப் செய்து அதை 121 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும், மேலும் அதில் உங்களுக்கு ஒன்றிலிருந்து, ஆறு மாதத்திற்கு இடையில் எத்தனை மாதங்களுக்கான கால் ஹிஸ்டரி தேவை என்பதையும் நீங்கள் பதிவிட வேண்டும். 

மேலும் உங்களுடைய இணைய முகவரியையும் அதில் பதிவிட்டால் உங்களுடைய மின்னஞ்சலுக்கு நேரடியாக அந்த தகவல்கள் வந்து சேரும். நிச்சயம் உங்களுடைய போனிலிருந்து மட்டுமே அந்த குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் நேரடியாக ஏர்டெல் நிறுவன கடைகளுக்கும் நீங்கள் சென்று இந்த சேவையை பெறலாம். ஆனால் அதற்கு உரிய சிறு தொகை உங்களிடம் வசூலிக்கப்படும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

ஜியோ 

ஜியோ சிம்மை பொறுத்தவரை "மை ஜியோ" என்ற செயலியை முதலில் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் நீங்கள் லாகின் செய்த பிறகு, அதில் உள்ள "மை ஸ்டேட்மென்ட்" என்கின்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களுக்கு தேவையான தேதிகளை உள்ளிட்டு கால் ரெக்கார்டுகளை உங்களால் பார்க்க முடியும்.

அனந்த் அம்பானியின் திருமணம்.. சொகுசு கப்பலில் நடக்கப்போகும் 3 நாள் திருவிழா - இதுவரை ஆனா செலவு எவ்வளவு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios