IRCTCயின் அட்டகாசமான Tour Package.. வெறும் 1089 ரூபாய் EMI செலுத்தி சுற்றிப்பார்க்கலாம் - எப்படி புக் செய்வது?

By Ansgar R  |  First Published May 18, 2024, 8:13 PM IST

IRCTC Tour Package : இந்தக் கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க, இந்திய ரயில்வே பல அட்டகாசமான சுற்றுலா பேக்கேஜ்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது.


அந்த வகையில் தென்னிந்தியாவிற்கான ஒரு புதிய சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை பல நகரங்களை ஒன்றிணைத்து கொண்டுவந்துள்ளது இந்திய ரயில்வே. இந்த பயணத்தில் மல்லிகார்ஜுனா ஜோதிர்லிங்கம், திருப்பதி பாலாஜி கோவில், ராம்நாத் சுவாமி கோவில் தொடங்கி மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களும் இந்த சுற்றுலா பேக்கேஜில் இடம்பெற்றுள்ளது.  

சுமார் 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் உள்ளடக்கிய இந்த IRCTC-யின் புதிய பேக்கேஜ், வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 18ஆம் தேதி வரை செயல்பட உள்ளது. இந்த தென்னிந்திய பயணத்தின் போது மதுரை ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளங்கள், என்று தமிழகத்திலும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.

Tap to resize

Latest Videos

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. அதுவும் குறைந்த விலையில்.. எவ்வளவு தெரியுமா?

இந்த பேக்கேஜில் என்னென்ன அடங்கும்?

IRCTC வழங்கும் இந்த பேக்கேஜில் ரயில் பயணத்திற்கான டிக்கெட், ஹோட்டல் மற்றும் 3 வேளை உணவு, மேலும் சுற்றுலா செல்லும் உள்ளூரில் இருக்கும் இடங்களை சுற்றி பார்க்க பேருந்து வசதி ஆகிய அனைத்தும் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேக்கேஜ் விவரம் 

ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்து, இரண்டு அல்லது மூன்று பேர் பங்கிட்டுகொள்ளும் ஏசி அல்லாத ஹோட்டல்களில் தங்கி பயணிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு 22,250 ரூபாய் வசூலிக்கப்படும். அதேபோல மூன்றாம் வகுப்பு ஏசி-யில் பயணித்து, ஏசி அல்லாத ஹோட்டல்களில் தங்குபவர்களுக்கு ஒரு நபருக்கு 37,000 ரூபாய் வசூல் செய்யப்படும். 

EMI வசதி 

அதேபோல மூன்றாம் வகுப்பு ஏசி கோச்சில் பயணித்து ஏசி ஹோட்டலில் தங்குபவர்களுக்கு ஒரு நபருக்கு 49,000 ரூபாய் வசூல் செய்யப்படும். மேலும் இந்த சுற்றுலாவில் குழந்தைகளை (5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட) பயணிக்கும்போது அவர்களுக்கு தனியாக கட்டணம் வசூல் செய்யப்படும். ஆனால் இந்த மொத்த தொகையையும் கட்டாமல், IRCTC இணையத்தில் குறிப்பிட்டுள்ள வங்கிகளின் மூலம் EMI பெற்று பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எப்படி புக் செய்வது? 

இந்த சுற்றுலா பேக்கேஜ் பொறுத்தவரை முதலில் புக் செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். www.irctctourism.com என்ற இணையதளத்தில் புக் செய்துகொள்ளலாம்.

நமோ ரேபிட் ரயில்.. பயணிகளுக்கு குட் நியூஸ்.. நேர அட்டவணை அதிரடி மாற்றம்.. முழு விபரம் இதோ..

click me!