Latest Videos

நீங்கள் ஒல்லியா இருக்கிறதை வச்சு கிண்டல் பண்றாங்களா?! உடனே 'இந்த' அல்வா செஞ்சு சாப்பிடுங்க!

By Kalai SelviFirst Published May 18, 2024, 4:02 PM IST
Highlights

இந்தப் பதிவில், பேரிச்சம் பழத்தில் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

தற்போது கோடை விடுமுறையில் குழந்தைகள் எல்லாரும் வீட்டில் இருப்பார்கள். இந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் ஏதாவது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க விரும்பினால், இந்த ரெசிபியை கண்டிப்பாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

நம்மில் பலருக்கு மூன்று வேளையும் உணவு சாப்பிட பிறகு ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உண்டு. இனிப்பு என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். நீங்கள் பல வகையான அல்வாக்களை ருசித்திருக்கலாம். ஆனால் "பேரீச்சம்பழம் அல்வா" பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த அல்வாவின் சிறந்த அம்சம் என்னவென்றால், இது செய்வது மிகவும் எளிது மற்றும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கட்லெட் செஞ்சு கொடுங்க.. ரெசிபி இதோ!

பேரீச்சம்பழம் நன்மைகள்: பேரிச்சம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றை சாப்பிடுவதால் செரிமான அமைப்பு மேம்படும், இருமல் மற்றும் சளியை போக்கும் மற்றும் உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அதே சமயம், பேரிச்சம்பழம் இதே கோளாறுகளை நீக்கி, உடலில் ஆற்றலையும், தசை வலிமையை அதிகரிக்க செய்கிறது. மேலும் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 

இப்படி பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பேரீச்சம் பழத்தில் அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவை தெரிஞ்சுக்கலாம் வாருங்கள்..

பேரீச்சம்பழம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பேரிச்சம்பழம் - 1 கப் (விதை நீக்கியது)
நெய் - 1/3 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
சூடான நீர் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன் 
உடைத்த முந்திரி - 1 ஸ்பூன்

இதையும் படிங்க:  சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் 'சோயா கட்லட்' ... எப்படி செய்வது..?

செய்முறை:
பேரீச்சம்பழம் அல்வா செய்ய முதலில், விதை நீக்கிய பேரீச்சம்பழத்தில் வெந்நீரைச் சேர்த்து மூடி வைத்து அதை 30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பேரீச்சம்பழங்கள் முழுவதுமாக தண்ணீரில் ஊறி இருக்க வேண்டும். நன்கு ஊறினால் பேரீச்சம்பழங்கள் மென்மையாக மாறியிருக்கும். இப்போது அதை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரைத்து வைத்த பேரீச்சம்பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாற ஆரம்பிக்கும். கெட்டியாகும் வரை கிண்டிக் கொண்டே  இருங்கள். ஓரளவுக்கு கெட்டியாக வந்ததும் அதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறி விடுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வையுங்கள். இடையிடையில் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அல்வா ஒட்ட ஆரம்பிக்கும் போது அல்வா நெய்யை உறிஞ்சி விடும். ஒரு கட்டத்தில் அது உறிஞ்சுவதை நிறுத்தி, நெய் வெளியேற்றுவதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த சமயத்தில், இதில் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு நெய்யில் வறுத்து வைத்த முந்திரியை அல்லாவில் சேர்த்து, மீண்டும் ஒருமுறை கிண்டி விட்டு அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் இப்போது டேஸ்ட்டான பேரீச்சம் பழம் அல்வா ரெடி!! அல்வாவை சாப்பிட்டு மகிழுங்கள்.. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!