வீடே மணக்கும் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published May 18, 2024, 3:03 PM IST

இந்த பதிவில் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் எப்படி செய்வது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.


சாம்பார் என்பது தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது. பொதுவாக சாம்பாரை சாதம், இட்லி மற்றும் தோசை உடன் சாப்பிடப்படுகிறது. சாம்பார் தான் சாதத்துடன் சாப்பிட சிறந்த காம்பினேஷன் என்றே சொல்லலாம். மேலும், சாம்பாரில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் 'ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்'. இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த சாம்பார் செய்வது மிகவும் எளிது.  

உங்க வீட்டில் ஒரு முறை கண்டிப்பாக இந்த சாம்பார் செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க, இப்போது இந்த பதிவில் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் எப்படி செய்வது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ராஜ்மாவில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்.. ரெசிபி இதோ!

ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்: 
துவரம் பருப்பு - 1/4 கப்
மைசூர் பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப் 
சின்ன வெங்காயம் - 6-7 முருங்கைக்காய் - 1 
புளிச்சாறு - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 3-4 ஸ்பூன் 
சர்க்கரை - கால் ஸ்பூன் 
நெய் - 1 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன் 
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

இதையும் படிங்க:  உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கட்லெட் செஞ்சு கொடுங்க.. ரெசிபி இதோ!

செய்முறை: 
ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் செய்ய முதலில், மேலே சொல்லப்பட்ட எல்லா பருப்புகளையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் அதை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.  இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்த பருப்புகள், சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மிதமான தீயில் வேக வையுங்கள்.

இப்போது, பருப்பு முக்கால் பதத்திற்கு வெந்ததும் அதில் எடுத்து வைத்த முருங்கைக்காய் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் சர்க்கரை, புளிசாறு மற்றும் சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு பிறகு 20 முதல் 25 நிமிடம் வரை கொதிக்க வையுங்கள்.

இது ஒரு புறம் இருக்க நீங்கள் மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் நெய் ஊத்தி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ளுங்கள். இப்போது இதை பக்கத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்த்து ஒரு முறை கிளறிவிடுங்கள். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சூப்பரான ஐயங்கார்  ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார் தயார்!! இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு தெரிவியுங்கள்...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!