சர்க்கரை நோயாளிகளுக்கு 'இந்த' இட்லி வரப்பிரசாதம்.. உடனே செஞ்சு சாப்பிடுங்க!

By Kalai Selvi  |  First Published May 18, 2024, 7:30 AM IST

ஓட்ஸில் நார்ச்சத்து, இரும்புச்சத்து வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்ற பல விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.


ஒவ்வொருவருக்கும் காலை உணவு மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சொல்லவே வேண்டாம். தற்போது, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் இந்த பிரச்சனை இருக்கும். ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை முறையால் இளம் வயதினர்களையும் இது தாக்குகிறது.  மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவை நேரம் தவறாமல் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக காலை உணவு முக்கியமானது. இதோ சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான காலை உணவாக "ஓட்ஸ் இட்லி" கொண்டு வந்துள்ளோம்.   

இந்த இட்லி செய்வது மிகவும் எளிது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இட்லி ஆரோக்கியமாகவும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். இந்த இட்லிக்கு நீங்கள் நிறைய காய்கறிகள் உடன் சாம்பார் மற்றும் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது, ஓட்ஸ் இட்லி எப்படி செய்வது என்று இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Latest Videos

undefined

ஓட்ஸ் இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
ரவை - 1 கப்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
இஞ்சி - 1( பொடியாக நறுக்கியது)
தயிர் - அரை கப் (புளித்தது)
தேங்காயைத் துருவல் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
பீன்ஸ், கேரட் - பொடியாக நறுக்கியது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
ஓட்ஸ் இட்லி செய்ய முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இதனுடன் ரவை மற்றும் புனித தயிர் சேர்த்து நன்றாக கலந்து, சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

இப்போது  ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை போட்டு தாளித்து, அதை 
ஒட்ஸ் இட்லிக்காகக் கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஓட்ஸ் இட்லி மாவு தயார். இப்போது இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுட சுட ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி ரெடி!!

சர்க்கரை நோயாளிகளே.. நீங்கள் எப்போதும் அரிசி இட்லி சாப்பிடுவதற்கு பதிலாக இனி ஓட்ஸ் இட்லி செஞ்சு சாப்பிடுங்கள். அது சாப்பிடுவதற்கு சுவையாகவும்,  ஆரோக்கியத்தை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது பதில் எங்களுக்கு தெரிவியுங்கள்.

click me!