ராஜ்மாவில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்.. ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published May 17, 2024, 4:07 PM IST
Highlights

இந்த பதிவில், ராஜ்மா மற்றும் மசாலா கலவையுடன் ஒரு நறுமண சைவ பிரியாணி செய்வது எப்படி, அதற்கான செய்முறை என்ன என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பிரியாணி விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா..? மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் வயிறு முட்ட சாப்பிடுவோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிட்டது பிரியாணி. எப்போதும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி என்று சாப்பிடாமல் சுவையான சத்தான ராஜ்மா பிரியாணி' செஞ்சு சாப்பிடுங்கள்.

ராஜ்மாவில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு உள்ளதால் இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. நீங்கள், எப்போதும் செய்யும் பிரியாணி போலவே இந்த பிரியாணியை செய்ய வேண்டும். அதுவும் இந்த பிரியாணியை நீங்கள் குக்கரில் செய்தால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அதுவும் நீங்கள் உதிரியாக செய்தால் மட்டுமே பிரியாணி சாப்பிட்டதற்கான பீல் கிடைக்கும். இப்போது இந்த பதிவில், ராஜ்மா மற்றும் மசாலா கலவையுடன் ஒரு நறுமண சைவ பிரியாணி செய்வது எப்படி, அதற்கான செய்முறை என்ன என்பதைக் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Latest Videos

இதையும் படிங்க:  குக்கரில் குழையாமல் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி.? வெறும் 5 நிமிடம் போதும் டக்குனு வேலை முடிஞ்சுடும்...

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
ராஜ்மா - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெரும் சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலைகள் - 2
தயிர் - 1/2 கப்
நெய் - 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
புதினா இலைகள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

இதையும் படிங்க:  பிரியாணிக்கு இப்படியும் ஒரு வரலாறா? பெர்சிய போர்வீரர்களின் ஃபேவரைட் எப்படி இந்தியாவில் பிரபலமானது?

செய்முறை:
ராஜ்மா பிரியாணி செய்ய முதலில், ராஜ்மாவை முதல் நாளே இரவு ஊற வைத்து, பின் காலையில் அதை நன்கு கழுவி குக்கரில் 10 விசில் வைத்து இறக்க வேண்டும். இப்போது அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் தண்ணீரில் ஊற வையுங்கள். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள். 

இப்போது குக்கரை அடுப்பில் வைத்து கூடானதும், அதில் நெய் விட்டு சூடானதும் அதில் பெருஞ்சீரகம், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

அதன் பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கொத்தமல்லி புதினா இலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தயிர் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து ராஜ்மா சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து விசில் வந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம். சுவையான ராஜ்மா பிரியாணி ரெடி இதனுடன் நீங்கள் ரைத்தா மற்றும் காலிஃப்ளவர் ஃப்ரை வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!