MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குக்கரில் குழையாமல் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி.? வெறும் 5 நிமிடம் போதும் டக்குனு வேலை முடிஞ்சுடும்...

குக்கரில் குழையாமல் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி.? வெறும் 5 நிமிடம் போதும் டக்குனு வேலை முடிஞ்சுடும்...

Biryani Recipe: குக்கரில் குழையாமல் எளிமையான முறையில், வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 24 2022, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Biryani Recipe

Biryani Recipe

சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி ஆகும். இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் குக்கரில் குழையாமல் எளிமையாக செய்யலாம். வாருங்கள் இந்த வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Biryani Recipe

Biryani Recipe

தேவையான பொருட்கள்: 

நெய் – 2 டீஸ்புன் 

பிரிஞ்சி இலை – 1

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்புன்  

எண்ணெய் – 2 டீஸ்புன் 

பச்சை பட்டாணி – 1/4 கப்

ஏலக்காய் – 3

சிறிய துண்டு பட்டை – 1

லவங்கம் – 4

பெரிய வெங்காயம் _ 1

தக்காளி – 1

35
Biryani Recipe

Biryani Recipe

மிளகாய் தூள் – 1 டீஸ்புன் 

உப்பு – 1 டீஸ்புன் 

மல்லித்தூள் _ 1 டீஸ்புன் 

உருளைக்கிழங்கு – 2

கேரட் – 5

பீன்ஸ் – 5

பாஸ்மதி அரிசி – 1 கப்

கொத்தமல்லி இலைகள் – ஒரு கையளவு

புதினா இலைகள் - சிறிதளவு

சிவப்பு மிளகாய் தூள் – 2 டீஸ்புன் 

45
Biryani Recipe

Biryani Recipe

செய்முறை விளக்கம்:

1. முதலில் பாஸ் மதி அரிசியை கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, வடிகட்டி தனியே எடுத்து கொள்ளவும். அடுப்பில், குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய்  சேர்த்து தாளிக்கவும். பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். 

மேலும் படிக்க தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்
 

2. பின்னர் பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள்  பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 

55
Biryani Recipe

Biryani Recipe

3. பிறகு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இப்பொழுது அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, மற்றும் பீன்ஸ் சேர்த்து கலக்கவும். 

 மேலும் படிக்க தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்

4. ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும். பிறகு 2 டீஸ்புன் நெய் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 2 விசில்  வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு, 5 முதல் 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால், சுவையான வெஜிடபிள் பிரியாணி தயாராகிவிடும். 
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved