MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்

தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்

Dosa kallu cleaning: உங்கள் வீட்டில் பழைய தோசைக்கல் அதிகமாக துருப்பிடித்து, கருப்பு பிடித்திருந்தால், அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 23 2022, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பொதுவாக இரும்பு கடாய், இரும்பு தோசைக்கல் போன்ற  இரும்பு சார்ந்த பாத்திரங்கள் அடிக்கடி தண்ணீரில் கழுவுவதால் ரொம்ப எளிதாக துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். இதை நீண்ட நாட்கள் அப்படியே கிடப்பில் போட்டு வைத்து விட்டால் ரொம்பவும் மோசமாக துருப்பிடித்திருக்கும். உடனே அதனை அப்புற படுத்திவிட்டு எளிமையாக பயன்படுத்த கூடிய நான்ஸ்டிக் தவா வாங்குவீர்கள். என்றைக்காவது யோசித்தது உண்டா? இதுவரை எத்தனை தவாவை வாங்கி இருப்பீர்கள், எத்தனை தவாவை தூக்கி எறிந்து இருப்பீர்கள்.  ஆனால் இரும்பு தோசை கல் எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வருடம் ஆனாலும் சரி அப்படியே இருக்கும்.

மேலும் படிக்க....கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இரும்பு தோசை கல்லில் தோசை சுடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாகும். எனவே, இரும்பு தோசை கல்லை எப்படி பராமரிப்பது? புதியதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால், அதை ஒரே நாளில் துரு நீக்கி, சுத்தம் செய்வது எப்படி? உங்கள் வீட்டில் நீண்ட நாள் பழைய இரும்பு தோசைக்கல் அதிகமாக துருப்பிடித்து, கருப்பு பிடித்திருந்தால், அதை சுத்தம் செய்வது எப்படி? என்பதற்கான சுலபமான வழிமுறைகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

35

1. முதலில், துருப்பிடித்த அந்தக் கல்லை, எடுத்து அடுப்பின் மீது வைத்து நன்றாகக் காயவிடுங்கள். அதிலிருந்து அப்படியே புகை கிளம்பும், அவ் அளவிற்கு காய வைக்க வேண்டும்.  இடுக்கியோ, பிடி துணியோ, கட்டாயம் கையில் இருக்க வேண்டும்.

2. தோசை கல் நன்கு காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை எடுத்து அதன் மீது தூவுங்கள். பின்னர் ஒரு மூடி எலுமிச்சை பழத்தை முழுதாக பிழிந்து கொள்ளுங்கள்.

45

3. பிறகு அந்த எலுமிச்சை பிழிந்த மூடியை வைத்தே  5 லிருந்து 10 நிமிடம் வரை துரு இருக்கும் இடங்களில் நன்கு பரபரவென்று தேயுங்கள். அடுப்பின் சூட்டிலேயே உப்பை வைத்து எலுமிச்சை சாறுடன் தேய்ப்பதால் துரு கரை முழுவதுமாக நீங்கிவிடும்.

மேலும் படிக்க....கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...

4. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தோசை கல்லை கீழே திருப்பி போட்டு, பின்புறமும் இதே போல உப்பை தூவி எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு தேய்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு தோசை கல்லை  இரும்பு நார் கொண்டு நன்கு தேய்த்து தண்ணீரில் நன்கு ஒரு முறை கழுவி கொள்ளுங்கள்.

55

5. அதன் பிறகு சமையல் எண்ணெயை நன்கு எல்லா இடங்களிலும் தடவி, அரிசி வடித்த கஞ்சி தண்ணியை ஊற்ற  24 மணிநேரம் ஊற வைத்து விடுங்கள். பின்பு, மீண்டும் மறுநாள் நன்றாக கழுவி வைத்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க....கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...
 
6. நீங்கள் தோசை ஊற்றுவதற்கு முன்பு பாதி அளவு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக நறுக்கி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு அனைத்து இடங்களும் படும்படியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் மொத்த துரு கரையும் நீங்கி விடும். தோசை கல் புத்தம் புதியதாக மாறிவிடும். பின்னர், இதில் தோசை சுட்டு பாருங்கள் ஹோட்டல் மாஸ்டர் தோற்று போகும் அளவிற்கு மொறு மொறு தோசை சுட முடியும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Marriage: உங்க லவ்வுக்கு வீட்ல சம்மதிக்கலயா? இப்படி செய்யுங்க டக்குனு ஒகே சொல்வாங்க.. ஸ்மார்ட் டிப்ஸ்!
Recommended image2
Gold Chain: 3 கிராம் தங்க செயின்.! அசத்தலான லேட்டஸ்ட் டிசைன்கள் இதோ!
Recommended image3
Cool Drinks: தினமும் கூல்டிரிங்க்ஸ் குடிக்கிறீங்களா? உடம்புக்குள்ள நடக்கும் 'அந்த' அதிர்ச்சி மாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved