குழந்தைகளுக்கு சத்தாகவும் சுவையாகவும் ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால் ரவை அடை தோசை செய்து கொடுங்கள்.
காலையில் எப்போதும் தோசை இட்லி சாப்பிட்டு போர் அடிச்சுட்டா? இன்று ஏதாவது ஸ்பெஷலாக சாப்பிட விரும்பினால் 'ரவை அடை தோசை' செய்து சாப்பிடுங்கள். அடையில் பல வகைகள் உள்ளன. மேலும் அவை ஒவ்வொன்றும் தனித்துவமானது. அதுமட்டுமின்றி, அவை அனைத்தும் சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ரவை அடை தோசை வெளியில் மிருதுவாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும். மேலும் இதற்கான மாவு கூட வெறும் 30 நிமிடங்களில் தயாராகி விடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த கட்டுரையில், ரவை அடை தோசை எப்படி செய்வது என்பதை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப் (புளித்தது)
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
துருவிய கேரட் - 2 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2 ஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை - 1 ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 ஸ்பூன்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: வெறும் அரிசி மாவுல எத்தனை நாளுக்கு தோசை சுடுவீங்க?! இந்த தோசையை சுடுங்க.. 'ஊட்டச்சத்து' எக்கச்சக்கம்!!
செய்முறை:
ரவை அடை தோசை செய்ய முதலில், ரவையில் அரிசி மாவு, புளிப்பு தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வையுங்கள்.30 நிமிடங்களுக்குப் பிறகு, ஏற்கனவே எடுத்து வைத்த பொருட்களைச் இதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்க வேண்டும். அவ்வளவு தான் ரவை அடை தோசைக்கான மாவு தயார்..
இதையும் படிங்க: இன்று காலை டிபனாக 'இளநீர் இட்லி' ட்ரை பண்ணுங்க.. ரெசிபி இதோ!
இப்போது அடை சுட தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் அதில் சிறிது எண்ணெய் தடவி, பின் வெங்காயத்தை வைத்து தடவி மாவை ஊத்தப்பம் போல் தடிமனாக ஊற்றவும். பின் அடையின் விளிம்புகளில் எண்ணெயை ஊற்றி, மிதமான தீயில் அடையை வேக வைக்கவும். பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாற்றவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வந்ததும்,
திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து இறக்கினால் சுட சுட சுவையான ரவை அடை தோசை ரெடி!! இதனுடன் நீங்கள் தக்காளி சட்னி அல்லது உங்கள் விருப்பப்படி விரும்பியதே வைத்து சாப்பிடலாம். மேலும், அடையை நீங்கள் சூடாக சாப்பிட்டாலும், ஆறி சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D