
நிராமயா ரிட்ரீட்ஸ் சம்ரோஹா ஒரு இணையற்ற உணவு அனுபவத்தை பெருமையுடன் வழங்கவுள்ளது. மலபாரின் கடற்கரையிலிருந்து சுவையான "மோப்லா உணவுகளின்" ருசியை அனுபவிக்க விருந்தினர்களை வரவேற்கிறது அதிர்ப்பள்ளியில் உள்ள நிராமயா ரிட்ரீட்ஸ் சம்ரோஹா. புகழ்பெற்ற சமையல் கலைஞர் அபிதா ரஷீத், மாப்பிலா சமையலின் ராணி என்று போற்றப்படுகிறார்.
Moplah என்பது மலபார் பகுதிகளில் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளின் தொகுப்பாகும். கேரளாவின் அதிரிப்பிள்ளியின் அழகிய பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், விருந்தினர்கள் இந்த கலாச்சார ஆய்வு மற்றும் கேரளாவின் சிறந்த சமையல் மற்றும் விருந்தோம்பல் திறமைகளுடன் இணைந்து மகிழ்ந்திட வரவேற்கப்படுகிறார்கள்.
வரும் மே 18ம் தேதி முதல் மே 19ம் தேதி 2024 வரை இரு நாள்கள் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. உன்னதமான இரவு உணவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு அனுபவத்துடன் மோப்லா உணவுகளின் பாரம்பரியத்தை கொண்டாட விருந்தினர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
யார் இந்த அபிதா ரஷீத்?
தனது பாட்டியின் பாரம்பரிய உணவு வகைகளில் இருந்து உத்வேகம் பெற்ற, கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 60 வயதான சமையல்கலைஞர் அபிதா ரஷீத், மலபார் உணவின் சாரத்தை எரச்சி பத்திரி, செமீன் மொலக் கரி மற்றும் அரிகடகா போன்ற உணவுகளுடன் காட்சிப்படுத்துகிறார். ஒவ்வொரு உணவும் பாரம்பரியம் மற்றும் சமையல் நிபுணத்துவத்தின் கதையைச் சொல்கிறது, இது மோப்லா உணவுகளின் தனித்துவமான சுவைகள் மற்றும் நறுமணங்களைப் பிரதிபலிக்கிறது.
சிறு வயது முதலே தனது பாட்டியிடம் இருந்து பல சமையல் கலைகளை கற்றுக்கொண்ட அபிதா ரஷீத், சுவைமிக்க தனது பகுதி உணவுகளை செய்வதில் கைதேர்ந்தவர், 60 வயதாகவும் அபிதா, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சமையல் துறை நிபுணத்துவம் பெற்றுள்ளார். குறிப்பாக Moplah முறை சமையலில் இவர் கைதேர்ந்தவர் ஆவார்.
மலபார் கடற்கரை இஸ்லாமியர்களின் தனித்துவமான மோப்லா உணவு வகைகள், அரபு சமையல் மரபுகளில் வேரூன்றிய புதிய மசாலா மற்றும் நறுமண மூலிகைகளின் மென்மையான கலவையை வழங்குகிறது என்றே கூறலாம். இந்த உணவுகள் புலன்களைக் கவர்ந்திழுக்கும் மற்றும் நாவுகளின் சுவை அரும்புகளை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கும்.
நிகழ்வு குறித்த தகவல்கள்
மே 18 மற்றும் 19ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு உணவில் பங்கேற்க மற்றும் பழச்சாறு அருந்த 1500 ரூபாயும், ஞாயிற்று கிழமை நடைபெறும் மத்திய விருந்தில் கலந்துகொள்ள 1700 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.
நிகழ்வு நடைபெறும் இடம்
Niraamaya Retreats Samroha, Athirippilly, Kerala
முன்பதிவுக்கு : +91 91 8852 4171
ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தவறி கூட 'இவற்றை' சாப்பிடாதீங்க.. அதனால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.