Verkuru Tips : வியர்க்குருவை அடியோடு விரட்ட 'இத' விட பெஸ்ட் டிப்ஸ் எதுவும் இல்ல!!

First Published Mar 27, 2024, 3:26 PM IST

பொதுவாகவே, கோடை காலத்தில் எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்று வியர்க்குரு. ஆனால், சில வீட்டு வைத்தியம் மூலம் இவற்றை குணமாக்க முடியும்.
 

கோடை காலத்தில் மக்கள் அடிக்கடி பல்வேறு தோல் பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் வியர்க்குரு. இந்த பருவத்தில் பெரும்பாலானோர் இதனால் அவதிப்படுகின்றனர். காரணம் இது தாங்க முடியாத அளவிற்கு எரிச்சல், அரிப்பை உண்டாக்கும். இது கழுத்து, முதுகு, இடுப்பு, மார்பு மற்றும் சில நேரங்களில் முகம் போன்ற உடலின் பல்வேறு பகுதிகளில் சிறிய சிவப்பு நிறத்தில்கொப்பளமாக வெளிப்படும்.

அதிகப்படியான வியர்வை மற்றும் மோசமான சுகாதாரம் பிரச்சினை காரணமாக இது வரும். உடலில் அதிக ஈரப்பதமோ, வியர்வையோ இருக்கிறதோ இது வர வாய்ப்புள்ளது. இருப்பினும், இவை அந்தளவிற்கு தீவிரம் அல்ல சில நாட்களுக்குள் அவை தானாகவே போய்விடும். சிலர் இதை குணமாக்க பூஞ்சை எதிர்ப்பி, ஆண்டிசெப்டிக் பவுடர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றிற்கு பதிலாக சில வீட்டு வைத்தியம் மூலம் வியர்க்குருவை குணமாக்க முடியும்.

அலோ வேரா ஜெல்: மற்றொரு தீர்வு கற்றாழை ஜெல் ஆகும். எனவே, கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு இருக்கும் இடத்தில் 
தடவி 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.  இது இனிமையான மற்றும் மென்மையாக்கும் பண்புகளுக்கு அறியப்படுகிறது. நீங்கள் இரவு தூங்கும் முன் இதை தடவி, காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

முல்தானி மெட்டி: வியர்க்குருவை போக்க சிறந்த வீட்டு வைத்தியத்தில் முல்தானி மிட்டி ஆகும். இதைப் பயன்படுத்த, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் கலந்து, அந்த பேஸ்ட்டை வேர்க்குரு இருக்கும் இடத்தில் தடவவும். முல்தானி மெட்டி குளிர்ச்சி தன்மையுடையது என்பதால், எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும். அதுமட்டுமின்றி, இது பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் தோல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

ஐஸ் க்யூப்ஸ்: இது எளிமையான மற்றும் பயனுள்ள தீர்வாகும். எனவே,  5-6 ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் போட்டு வியர்க்குரு இருக்கும் இடத்தில்
ஐஸ் கட்டியை வைக்கவும். இப்படி செய்தால், படிப்படியாக எரியும் உணர்வு, அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் ஆகியவைகுறைந்து விடும்.

வேப்ப இலைகள்: ஒரு கைபிடி வேப்ப இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் அந்த நீரை ஆறவைத்து, வியர்க்குரு இருக்கும் இடத்தில் வைத்து சுத்தம் செய்யுங்கள். வேர்க்குருவால் ஏற்பட்ட எரிச்சல், அரிப்பு குறையும்.

இதையும் படிங்க: வெயில் காலத்தில் வரும் வியர்குருவால் ஒரே தொல்லையா இருக்கா? எரிச்சல் வேண்டாம்! இதோ சூப்பர் டிப்ஸ்...

சந்தனம்: சந்தனத்தை தண்ணீரில்  கலந்து வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால், சருமம் குளிர்ச்சியடைந்து வியர்க்குரு குறையும்.

இதையும் படிங்க: சருமத்தில் அரிப்பு தோன்றினால் லேசாக எடுத்துவிட வேண்டும்- புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம்..!!

பருத்தி ஆடை அணியுங்கள்: உஷ்ணத்தை தவிர்க்க, முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள். உங்களுக்கு உஷ்ணத்தால், வியர்க்குரு அல்லது சொறி இருந்தால், பருத்தியைத் தவிர வேறு எந்த ஆடைகளையும் அணிய வேண்டாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!