Asianet News TamilAsianet News Tamil

வெயில் காலத்தில் வரும் வியர்குருவால் ஒரே தொல்லையா இருக்கா? எரிச்சல் வேண்டாம்! இதோ சூப்பர் டிப்ஸ்...

In the summer the one causing the heat rash there? Do not be irritated! Here are super tips ...
In the summer the one causing the heat rash there? Do not be irritated! Here are super tips ...
Author
First Published May 3, 2018, 2:01 PM IST


வெயில் காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். 

இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள். 

இந்த இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலமும் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம்.

** வேப்பிலை

வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள். அல்லது வேப்பிலை போட்ட தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் முகம் மற்றும் உடலை கழுவி வந்தால் வியர்குருவால் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தும்.

** சந்தனம் 

சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை போக்கலாம்.

** பாசிப்பருப்பு

கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்பு மாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக் கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.

** கற்றாழை ஜெல் 

கற்றாழை ஜெல் கூட வியர்குரு பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும். அதற்கு அதன் ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

** சீரகம் 

சீரகம் இரவில் படுக்கும் போது சீரகப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்
 

Follow Us:
Download App:
  • android
  • ios