சுனில் நரைன், ரகுவன்ஷி அதிரடியால் 235 ரன்கள் குவித்த கொல்கத்தா – தப்பு பண்ணிய லக்னோ!

First Published May 5, 2024, 10:30 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 54ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்துள்ளது.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, மாயங்க் யாதவ்விற்கு பதிலாக யாஷ் தாக்கூர் அணியில் இடம் பெற்றார். கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 4.2 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடி காட்டவே, சுனில் நரைன் 39 பந்துகளில் 6 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரகுவன்ஷி 32 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரிங்கு சிங் 16 ரன்களில் வெளியேறினார். கடைசியில் ஷ்ரேயாஸ் ஐயர் 23 ரன்கள் எடுக்கவே, ராமன் தீப் சிங் 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில், நவீன் உல் ஹாக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

இந்தப் போட்டியின் போது மோசின் கான் காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக கன்கஷன் வீரராக யுத்வீர் சிங் களமிறங்கி 2 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயூஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீ உல் ஹாக், மோசின் கான், யாஷ் தாக்கூர்.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 3 போட்டிகளில் வெற்றியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய போட்டியில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது.

Lucknow Super Giants vs Kolkata Knight Riders, 54th Match

இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் கேகேகேஅர் 7ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் 3ஆவது இடத்திற்கு முன்னேறும்.

click me!