திருமண நிகழ்விற்கு வந்தவர்கள் வீட்டின் வாசலில் உள்ள முட்டு சந்து சாலையில் படுத்திருந்த நிலையில், வடமாநில பெண் ஒருவர் கூகுள் மேப்பை நம்பி சாலையில் வேகமாக சென்ற போது
சாலையில் படுத்தவர்கள் ஏறி இறங்கிய கார்
சென்னையில் உறவினர் திருமணத்திற்கு வந்தவர்கள், வீட்டில் இடப்பற்றாக்குறை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டின் வாசலில் படுத்திருந்த பெண்கள் மீது வடமாநில பெண் சொகுசு காரை கொண்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர் 10-வது தெருவில் வசித்து வரும் சரிதா என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் ஏராளமானோர் வெளியூரில் இருந்து வந்துள்ளனர். இரவு வீட்டில் இட பற்றாக்குறை காரணமாக உறவினர்கள் சிலர் வீட்டின் வாசலில் உள்ள சாலையில் உறங்கியுள்ளனர். இந்த சாலை முட்டு சந்து என்பதால் வேறு வாகனங்கள் வராது என்ற நம்பிக்கையில் படுத்துள்ளனர்.
undefined
கால் மீது ஏறி இறங்கிய கார்
ஆனால் அதிகாலை 4 மணி அளவில் அவ்வழியாக சென்ற மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வீட்டு வாசலில் உள்ள சாலையில் படுத்திருப்பவர்களை கண்டுகொள்ளாலம் கால்களின் மீது ஏற்றிவிட்டு நிற்காமல் தப்பி சென்ற முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சாலை முட்டு சந்து என்று தெரியாமல் காரை இயக்கிய வடமாநில பெண் இறுதியில் காரை வேறு வழியில்லாமல் நிறுத்தியுள்ளார்.இதனையடுத்து தூங்கியவர்களின் காலில் கார் ஏறி இறங்கிய நிலையில் அலறி துடித்தவர்கள் போட்ட சத்தத்தால் அருகில் இருந்த மக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கூகுள் மேப்பை நம்பியதால் ஏற்பட்ட விபத்து
இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும். அதில் சரிதா மற்றும் பிள்ளை நாயகி என்ற இரு பெண்களின் கால் எலும்புகளும் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், காரை இயக்கிய பெண் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதாகும் வைஷாலி என்பதும்,
சென்னையில் உறவினர் வீட்டிற்கு வந்த வைஷாலி கூகுள் மேப் காட்டிய பாதையில் தான் வந்ததாகவும், ஆனால் அது குறுகலான முட்டு சந்து என்பது தங்களுக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் காரை இயக்கிய அந்தப் பெண் மது போதையில் இந்த விபத்தை ஏற்படுத்தினாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.