பாடலுக்கு எது முக்கியம்? புரிந்தவன் ஞானி; புரியாதவன் அஞ்ஞானி - இளையராஜாவுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த வைரமுத்து

First Published Apr 28, 2024, 2:16 PM IST

பாடலுக்கு முக்கியம் இசையா அல்லது பாடல் வரியா என்பது குறித்து படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசி இருக்கிறார்.

Ilaiyaraaja, vairamuthu

பாடலுக்கான முழு உரிமையும் இசையமைப்பாளருக்கு தான் என்று உரிமை கோரி இசைஞானி இளையராஜா தரப்பில் அண்மையில் நீதிமன்றத்தில் வாதிட்டது மிகப்பெரிய பேசுபொருள் ஆனது. அந்த வழக்கில் நீதிமன்றமே, பாடல் வரிகள் இல்லை என்றால் பாடலே இல்லை அப்படி இருக்கும்போது பாடலாசிரியரும் உங்களைப் போல் பாடலுக்கு உரிமை கோரினால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பி இருந்தது. இதன்பின்னர் பாடல் யாருக்கு சொந்தம் என்கிற விவாதம் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வந்தது.

Ilaiyaraaja

இந்த விவகாரம் குறித்து படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது பேசிய பாடலாசிரியர் வைரமுத்து. அதில் தன் பங்குக்கு இளையராஜாவை சூசகமாக நோஸ் கட் பண்ணி பேசி இருக்கிறார். அதில் பாடலுக்கு மொழி எவ்வளவு முக்கியம் என்பதைப்பற்றியும் அவர் விளக்கம் அளித்துள்ளார். வைரமுத்துவின் இந்த பதிலடி பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Venkat : "முடிஞ்ச வரை ட்ரை பண்ணிட்டேன்".. ஓப்பனாக சொன்ன VP - சன் நிருவத்திற்கு தல ரசிகர்கள் வைத்த கோரிக்கை!

vairamuthu

அதில் அவர் பேசியதாவது : “ஒரு பாடலில் இசை பெரிதா? மொழி பெரிதா என்பது பெரும் சிக்கலாக பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதில் என்ன சந்தேகம் வேண்டும், இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான் அதற்கு பாட்டு என்று பெயர். சில நேரங்களில் இசையைவிட மொழி உயர்ந்ததாகவும், சில நேரங்களில் மொழியை விட இசை உயர்ந்ததாகவும் திகழுகிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதை புரிந்துகொள்பவன் ஞானி, புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி.

vairamuthu reply to Ilaiyaraaja

ஒரு குழந்தை பிறந்த உடன் ஏன் பெயர் வைக்கிறார்கள். பெயர் வைத்தால் தான் அவர்களின் வாழ்வு அவர்களை சாருகிறது. அவர்களின் உரிமை அவர்களை சாருகிறது. பெயர் தான் பட்டா, பெயர் தான் பத்திரம், பெயர் தான் சொத்து, பெயர் தான் ஆதார், அது இருந்தால் தான் நீ இந்தியாவில் நீயாக இருக்க முடியும். பாட்டுக்கு பெயர் வைப்பது இசையா? மொழியா? என்று கேள்வி எழுப்பிய வைரமுத்து, மலர்ந்தும் மலராத பாதி மரம் போல என்கிற பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, மன்மத லீலையை வென்றார் போன்ற பாடல்களுக்கு பெயர் கொடுத்தது மொழி, ஆனால் அதற்கு அழகு சேர்த்தது இசை என வைரமுத்து கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு பாடலை ஹம் பண்ணி யாராவது பாட சொல்வார்களா? சின்ன சின்ன ஆசை பாடுங்கள் என்று தானே சொல்வார்கள். பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி, அந்த மொழிக்குரிய மரியாதையை இசையும், இசைக்குரிய மரியாதையை மொழியும் பரஸ்பரம் வழங்கினால் தான் கலை வெற்றிபெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என வைரமுத்து பேசி இருந்தார்.

இதையும் படியுங்கள்... Ajith : அஜித் - வடிவேலு இடையே அப்படி என்ன தான் பிரச்சனை? 20 ஆண்டுகளாக ஏகே படங்களில் வடிவேலு தலைகாட்டாதது ஏன்?

click me!