ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி.? என்னென்ன தகவல்கள் பதிவு செய்ய வேண்டும் தெரியுமா.?

First Published May 6, 2024, 8:02 AM IST

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் இ பாஸ் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி தொடங்கியுள்ளது. இதில் என்ன என்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்ற விவரம் இதோ

இ பாஸ் கட்டாயம்

வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்து வரும் நிலையில், குளுமையான இடங்களை நோக்கி மக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் கூடுவதால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மே மாதம் 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை இ பாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உத்தரவிடப்பட்டது. 

இ பாஸ் பெறுவது எப்படி.?

இதனையடுத்து நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சார்பாக இ பாஸ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. மேலும் இதற்காக பிரத்தியோக இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. https://epass.tnega.org/ இந்த இணையதள முகவரியில் இன்று காலை முதல் விண்ணப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கான  இ பாஸ் பெறுபவர்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த இணையதளத்திற்கு உள்ளே சென்றவுடன் தங்களது இந்தியாவை சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டு நபரா என்ற கேள்வி கேட்கும். இதனை பதிவு செய்த பிறகு மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.  

எத்தனை பேர் பயணம்.?

அதில் வரும் ஓடிபி பதிவு செய்த பிறகு இபாஸ் விண்ணப்பிப்பதற்கான படிவம் திறக்கும்.  அதில் விண்ணப்பதாரர் பெயர், வருகையின் காரணம், வாகன பதிவு எண், மொத்த பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நிரப்ப வேண்டும். இதனையடுத்து சுற்றுலா செல்லும் வாகனம் மற்றும்  வாகனத்தின் வாகன உற்பத்தி செய்த வருடம், வாகனம் பெட்ரோல் டீசல் கேஸ் இதில் எந்த வகையில் இடம் பெறுகிறது என்ற விவரமும் இடம் பதிவு செய்ய வேண்டும். 
 

எத்தனை நாட்கள்.?

இதனையடுத்து வாகனத்தின் வகை கார் வேன் பஸ் என பல்வேறு வகைகள் சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் நாம் எந்த வாகனத்தில் பயணம் செய்கின்றோம் என்பதை நிரப்ப வேண்டும்.  இதனை தொடர்ந்து எந்த தேதியில் கொடைக்கானல் அல்லது ஊட்டிற்கு வருகிறீர்கள் என்ற தேதியை பதிவு செய்ய வேண்டும். எந்த தேதியில் அந்த ஊரில் இருந்து வெளியேறும் நாட்களையும் குறிப்பிட வேண்டும்,  அடுத்ததாக எந்த மாநிலத்தில் இருந்து வருகிறீர்கள் என்ற தகவலையும் அதில் மற்றொன்றில் எந்த மாவட்டம் என்ற தகவலையும் பதிவு செய்ய வேண்டும்.  
 

தங்கும் இடம் என்ன.?

அடுத்ததாக நாம் எந்த ஊரில் வருகின்றமோ சொந்த வீட்டின் முகவரியை பதிவு செய்ய வேண்டும்,  அடுத்ததாக நாம் தற்போது ஊட்டி, கொடைக்கானலில் எங்கு தங்குகின்றோம் என்ற விவரம் தெரிந்திருந்தால் தாங்கும் இடத்திற்கான பெயரை குறிப்பிடலாம். தங்குமிடம் தெரியவில்லை என்றால் தங்குமிடம் தெரியாது என்ற தகவலையும் பதிவு செய்யலாம். இதனையடுத்து  விண்ணப்ப படிவத்தில் கேள்விகள் முடிக்கப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை  சப்மிட் கொடுத்தால் தங்களுக்கு இ-பாஸ் கிடைத்துவிடும்

click me!