Courtallam
குற்றாலமும் சாரல் மழையும்
குற்றாலம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இயற்கை, இயற்கையை சார்ந்த அருவிகள், இதமான சாரல் காற்று, இதனை ரசிக்கவே பல மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல பல வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.
அருவிகளில் இருந்து கொட்டும் மூலிகை தண்ணீர் புத்துணர்ச்சியை கொடுக்கும். அந்த அளவிற்கு இயற்கை சார்ந்த இடம் தான் குற்றாலம். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக வறண்டு காணப்படுகிறது.
heat wave
கொளுத்தும் வெயில்
வெயிலின் தாக்கம் தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக வெப்ப அலை வீசிவருகிறது. கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி என 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 110 டிகிரி வரை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக மக்கள் குளுமையான இடங்களை தேடி செல்லும் நிலை தொடர்கிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என மக்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது இந்த ஊர்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என கூறப்பட்டதால் மக்கள் வேறு எந்த ஊருக்கு செல்லலாம் என தேட தொடங்கியுள்ளனர்.
TN 12th Exam Result : நாளை 12ஆம் வகுப்பு ரிசல்ட்.! எத்தனை மணிக்கு பார்க்கலாம்.? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்
kutralam falls
வறண்டு காணப்படும் அருவிகள்
அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க குற்றால சாரலில் நனைந்து கொண்டே குற்றால அருவிகளில் குளிக்க மக்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையானது பெய்யாத காரணத்தால் அருவிகள் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டமே ஆள் நடமாட்டம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மேற்கு மலை தொடர்ச்சி
குற்றாலத்தை பொறுத்த வரை கேரளாவில் மழை பெய்ய தொடங்கும் காலமான ஜூன், ஜூலையில் தான் சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது. அப்போது தான் இதமான சாரலோடு குற்றால அருவில் இயற்கையான தண்ணீரில் குளித்த மகிழும் நிலை உருவாகும் என தென்காசி வாசிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத நிலையில் இதமான காற்று வீசுவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் அதிக வெப்பத்தில் இருந்து மக்கள் சற்று ஆறுதல் அடையும் நிலை குற்றாலம் பகுதியில் உள்ளது.