காங். மாவட்ட தலைவர் மர்ம மரணம்
நெல்லை மாவன்ன காங்கிரஸ் தலைவர் KPK ஜெயக்குமார் தனசிங் அவரது தோட்டத்திலேயே பாதி எரிந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து நேற்று மாலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்றது. இன்று காலை 8 மணிக்கு அவரது உடலை உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இறப்பதற்கு முன்பாக மரண வாக்குமூலம் கடிதம் கொடுத்ததாகவும் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையென புகார் கூறப்பட்டது.