வீட்டிற்குள் முடங்கும் மக்கள்
நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் வெயிலின் மக்களால் நடமாட முடியாத நிலை நீடிக்கிறது. வீட்டிற்குள் முடங்கி இருக்கவும் முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து குழுமையான இடங்களை தேடி குடும்பம் குடும்பமாக செல்ல தொடங்கியுள்ளனர். வட தமிழகமான கரூர், தரும்புரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலூர் பகுதியை புரட்டி போட்ட வெயில் தற்போது சென்னையில் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது. நேற்று சென்னையில் 42 டிகிரி வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.