கொளுத்தும் வெயில்..! ஒரே வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை.! ஒரு கிலோ பீன்ஸ் என்ன விலை?

First Published May 2, 2024, 9:16 AM IST

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் உற்பத்தி பெரும் அளவில் குறைந்துள்ளது. இதனையடுத்து காய்கறிகளின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

வாடி வதங்கும் காய்கறிகள்

வெயிலின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக காய்கறிகள் செடியிலேயே வாடி வதங்கி விடுவதால் விற்பனைக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக காய்கறி விலையானது கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சின்ன வெங்காயம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

தக்காளி விலை என்ன.?

தக்காளியை பொறுத்தவரை ஒரு கிலோ 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு ம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

Vegetables Price Koyembedu

கத்திரிக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Vegetables Price Today

உச்சத்தை தொட்ட பீன்ஸ் விலை

அதே நேரத்தில் பீன்ஸின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது.  அந்த வகையில் ஒரு கிலோ பீன்ஸ் 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது, இஞ்சியை பொறுத்தவரை ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ தற்போது 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 

click me!