தமிழகத்தில் சுட்டெரித்த வெயில்
தமிழகத்தி்ல் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் பதிவான வெப்பநிலை நிலவரம் தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 42.5° செல்சியஸ், ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3° செல்சியஸ்,
சேலத்தில் 40.8° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.6° செல்சியஸ், தர்மபுரி, மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1° செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.4° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது.