மே 1ஆம் தேதி வரை மழை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் அடுத்து வரும் நாட்களில் வானிலை நிலவரம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக 28.04.2024 முதல் 01.05.2024 வரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Tamilnadu Rain:அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
வறண்ட வானிலை
02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
03,05,2024 மற்றும் 04.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
28,04,2024 முதல் 02.05.2024 :
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
28.04.2024 முதல் 01.05.2024 வரை
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 2"-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-43" செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39* செல்சியஸ் இருக்கக்கூடும்.
Heat wave
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
28.04.2024 முதல் 30.04.2024 வரை: மூன்று தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
01.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.