Asianet News TamilAsianet News Tamil

Venkat : "முடிஞ்ச வரை ட்ரை பண்ணிட்டேன்".. ஓப்பனாக சொன்ன VP - சன் நிருவத்திற்கு தல ரசிகர்கள் வைத்த கோரிக்கை!

Venkat Prabhu : சென்னை 28, மங்காத்தா, கோவா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு, முதல் முறையாக தளபதி விஜய் அவர்களை வைத்து GOAT என்ற படத்தை இயக்கி வருகின்றார்.

Director Venkat Prabhu open reply for thala ajith kumar fans on mankatha re release ans
Author
First Published Apr 28, 2024, 1:31 PM IST

மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்த பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு சிறு வயது முதலையே பல திரைப்படங்களில் பாடகராக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு நடிகராகவும் நடிக்க துவங்கிய வெங்கட் பிரபு, கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான "சென்னை 600028" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கினார். 

தனது முதல் திரைப்படத்திலேயே, தமிழக அரசு வழங்கும் "சிறந்த திரைப்படத்திற்கான" மாநில விருதை வென்றவர் வெங்கட் பிரபு. தொடர்ச்சியாக "கோவா", "மங்காத்தா", "மாசு என்கிற மாசிலாமணி", மற்றும் "மாநாடு" போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் அவர். தற்பொழுது தளபதி விஜய் அவர்களை வைத்து "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கிய வருகிறார். 

Good Bad Ugly : விடாமுயற்சியை வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டு... குட் பேட் அக்லி படத்துக்கு தாவும் அஜித்..!

இது தளபதி விஜயின் 68வது திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் அவர்களுடைய "கில்லி" திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி, சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து, மீண்டும் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது. இந்த சூழ்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "மங்காத்தா" திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்யுமாறும், அதற்காக தாங்கள் வெறித்தனமாக காத்திருப்பதாகவும் தல ரசிகர்கள், ட்விட்டர் பகுதியில் வெங்கட் பிரபுவை டேக் செய்து ஒரு பதிவினை போட்டுள்ளனர். 

அதற்கு பதில் அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு "இதுவரை என்னால் முடிந்த அனைத்து செயல்பாடுகளையும் நான் செய்து விட்டேன். மங்காத்தா திரைப்படத்திற்கான உரிமம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகையால் அந்த திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதை குறித்து அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்" என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். 

தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தல அஜித் அவர்களுடைய ரசிகர்கள், மங்காத்தா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

SJ Suryah : "இது மை பாய் சீசருக்காக".. ராகவாவுடன் "மாற்றத்தில்" இணைந்த எஸ்.ஜே. சூர்யா - வைரலாகும் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios