உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால்... பொய்க்கு நரேந்திர மோடி!10 பொய்களை பட்டியலிட்டு போட்டு தாக்கும் மனோ தங்கராஜ்

By Ajmal Khan  |  First Published May 6, 2024, 6:05 AM IST

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்கிற மிகப்பெரிய தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. இந்தநிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களில் பேசிய பொய் தகவல்கள் என்ற தலைப்பில் அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ளார். 


தாலி கூட மிஞ்சாது

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், 3வது கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்தில்  நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரப் பொய்கள் என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார். அதில், 

Tap to resize

Latest Videos

பொய் 1. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.

பொய் 2. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு  பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்.

பொய் 3. உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்பட்சத்தில் ஒரு மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள். 

பொய் 4. காங்கிரஸ் இங்கு இறந்துகொண்டு இருப்பதால், பாகிஸ்தான் அழுது கொண்டு இருக்கிறது. காங்கிரசின் இளவரசர், இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை!

டெண்டரில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

பொய் 5. அரசாங்கத்தின் டெண்டர் நடைமுறைகளில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளதாக பொய் தகவலை பரப்பியுள்ளார் மோடி.
               
பொய் 6. ராமர் கோயில் நிகழ்வை புறக்கணித்தவர்கள் தான் I.N.D.I.A கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
                                            
பொய் 7. இந்திய அரசியலமைப்பை மாற்றி OBC, SC,ST மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து ஜிகாதி வாக்கு வங்கியிடம் தர காங்கிரஸ் முயல்கிறது.

பொய் 8. எனக்கு சொந்தமாக வீடு சைக்கிள் கூட இல்லை என்றார் மோடி. ஆனால் 2019 மக்களவைத் தேர்தல் வேட்புமனுவில் குஜராத் காந்திநகரில் ₹1.10 கோடி மதிப்பில் சொந்த வீடு இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பொய் 9. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பரம்பரை வரியின் கீழ், 55 சதவீத மக்களின் பரம்பரை சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

பொய் 10. நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதாக பொய்யான தகவலை கூறியுள்ளார் மோடி என வரிசையிட்டு மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ளார். 

டெல்லியில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது: தடுமாறி சுதாரித்த திருமாவளவன்!

click me!