திரிஷா முதல் சாய் பல்லவி வரை.. கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லாமல் சுற்றும் சிங்கிள் அழகிகள் - சிறப்பு லிஸ்ட் இதோ!

First Published Jan 23, 2024, 6:08 PM IST

Single Heroines of Kollywood : தமிழ் திரையுலக ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள நாயகிகள் சிலர் 35 வயதை கடந்தும் கூட இன்றளவும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிள் நாயகியாக சிறகடிக்கின்றனர்.

Anushka Shetty

தற்பொழுது தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நாயகி தான் அனுஷ்கா செட்டி. தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி முடித்துள்ளார் இவர், இருப்பினும் இன்றளவும் சிங்கிள் நாயகியாகவே வலம் வருகிறார். பல பிரபலங்களுடன் இவர் திருமண கிசுகிசுவில் அடிபட்டாலும் தனது திருமணம் குறித்து இன்றளவும் மௌனம் காத்து வருகிறார்.

மீண்டும் இணையும் 'கட்டா குஸ்தி' படத்தின் கூட்டணி! அதிகார பூர்வமாக அறிவித்த விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்!

Aishwarya Rajesh

சென்னையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த ஜனவரி 10ஆம் தேதியோடு தனது 34 ஆவது வயதை கடந்து பயணித்து வருகிறார். தமிழ் திரை உலகிலும், தெலுங்கு உலகிலும் முன்னணி நடிகையாக விளங்கிவரும் இவர் இப்போது வரை சிங்கிள் நாயகியாகவே இருக்கின்றார்.

Sai Pallavi

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நாயகி தான் சாய் பல்லவி. மருத்துவரான இவருடைய சகோதரிக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் வயது 31ஐ கடந்து விட்டது என்ற பொழுதும், இன்றளவும் சிங்கிள் நாயகியாகவே வலம்  வருகின்றார்.

Trisha

திரிஷா, நாற்பதை தொட்டுவிட்ட பொழுதிலும் இன்றளவும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மட்டுமல்லாமல் 2K கிட்ஸ் மத்தியிலும் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் தான் இவர். கடந்த சில காலமாக ஒரு ரீஎன்ட்ரி கொடுத்ததை போல பல மாஸ் திரைப்படங்களில் நடித்து மிரட்டி வருகிறார் திரிஷா. இவருக்கு ஏற்கனவே ஒருமுறை நிச்சயம் வரை சென்று இவர் கல்யாணம் நின்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப்போது இவர் சிங்கிள் நாயகியாகத் தான் இருக்கின்றார்.

ஏலியன் ஸ்டோரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு.. ஷார்ப்பா ரெடியாகும் சிவாவின் அயலான் 2 - VFXக்கு மட்டும் 50 கோடியாம்!

click me!