Rasi Palan : இந்த 5 ராசிகளின் சரித்திரத்தில் 'மன்னிப்பு' என்ற வார்த்தைக்கு இடமில்லை!

First Published May 9, 2024, 8:18 PM IST

தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பது மனித இயல்பு. ஆனால் ஜோதிடம் படி, சில ராசிக்காரர்கள் தவறு செய்தாலும் கூட மன்னிப்பு கேட்க மாட்டார்கள். அந்த குணம் கொண்ட ராசிகள் யார் யார்ரென்று இங்கு பார்க்கலாம்.
 

தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பது மனித இயல்பு. ஆனால், தவறு செய்தாலும் கூட மன்னிப்பு கேட்காதவர்களை நீங்கள் எப்போதாவது பார்ததிருக்கிறீர்களா..? ஜோதிடத்தில், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்க தயங்குவதற்கு அறியப்பட்ட சில ராசிகள் உள்ளன.  இந்த கட்டுரையில் மன்னிப்பு கேட்க விரும்பாத முதல் 5 ராசிகளை பற்றி பார்க்கலாம்.

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் குறுகிய மனப்பான்மை மற்றும் விரைவாக கோபப்படுவார்கள். இவர்கள் ஆபத்துகளை கண்டு பயப்படுவதில்லை மற்றும் அசைக்க முடியாத உறுதியுடன் தங்கள் இலக்குகளை அடைகிறார்கள். இருந்தாலும்,  இவர்கள் மன்னிப்பு கேட்க வாய்பில்லை. தவறு செய்திருந்தாலும் கூட மன்னிப்பு கேட்பதே பலவீனத்தின் அடையாளமாக கருதுகிறார்கள்.

Scorpio Zodiac

விருச்சிகம்: ஒருபோதும் மன்னிப்பு கேட்காத ராசிகளில் ஒன்று விருச்சிகம். இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் மன்னிப்பு கேட்க விரும்ப மாட்டார்கள். மன்னிப்பு கேட்பது அவர்களின் சுய மதிப்பை இழப்பத்காக உணர்வதால், தவறு செய்தாலும் கூட மன்னிப்பு ஒருபோதும் கேட்க விரும்புவதில்லை.

தனுசு: இந்த ராசிக்காரர்கள் நம்பிக்கை மற்றும் சாகச மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் சில சமயங்களில் மன்னிப்பு கேட்க தயங்குவார்கள். இவர்கள் நேரம் அனைத்து காயங்களும் குணப்படுத்தும் என்று கருதலாம். அவர்கள் தங்கள் செயல்களின் முக்கியத்துவத்தை குறித்து மதிப்பிடும்போது மன்னிப்பு கேட்பது சவாலாக இருக்கும்.

மகரம்: இந்த ராசிக்காரர்கள் மன்னிப்பு கேட்க வாய்ப்பில்லை. தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்காகவோ அல்லது எடுக்கும் செயல்களுக்காகவோ மன்னிப்பு ஒருபோதும் கேட்க மாட்டார்கள். இவர்கள் தப்பு செய்திருந்தாலும் கூட அதை ஒப்புக்கொள்ளும் அவர்களின் விருப்பம் அரிது. மன்னிப்பு கேட்பது தனது பலவீனத்தை காட்டுகிறது என்று நினைக்கிறார்கள்.

கும்பம்: இவர்கள் சுதந்திர சிந்தனையாளர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். அவர்கள் தனித்துவமான கண்ணோட்டங்கள் மற்றும் சமூக காரணங்களுக்காக அவர்களின் அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார்கள். இருந்த போதிலும் சில சமயங்களில் இவர்கள் மன்னிப்பு கேட்பதை தயக்கம் காட்டலாம்.

click me!