தேர்தல் பண பிரச்சனை? உட்கட்சி பூசல்.. பாஜக மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு - குற்றாவளிகளை தேடும் போலீசார்!

Ansgar R |  
Published : May 09, 2024, 08:44 PM IST
தேர்தல் பண பிரச்சனை? உட்கட்சி பூசல்.. பாஜக மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு - குற்றாவளிகளை தேடும் போலீசார்!

சுருக்கம்

Kudavasal BJP : பாஜகவை சேர்ந்த மதுசூதனன் என்பவரை, உட்கட்சி பூசலில் பாஜகவினர் சிலரே சரமாரியாக அரிவாளால் வெட்டிய சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள இடம் தான் காவனுர், இங்கு ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் பாஜக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் மாவட்ட தலைவரான மதுசூதனன். கட்சியில் செல்வாக்குடன் இருந்த அவருக்கும் பாஜக அமைப்பு சாரா தொழிலார்கள் சங்க தலைவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் அதே போல ஒரு பெண் விவகாரத்தில் மதுசூதனனுக்கும் செந்தில்ராசன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே இருந்த வார்த்தை மோதல் இன்று மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. 

தாய்க்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த தந்தையை நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்த சிறுவன்

மதுசூதனன் வழக்கம் போல ஒன்று மே மாதம் 9ம் தேதி காலை தனது கடையை திறந்து வியாபாரம் செய்ய துவங்கியுள்ளார். அப்போது மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கூறியதன் பேரில், திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்அரசனின் தூண்டுதலின் பேரில் 6 பேர் கொண்ட கும்பல் கடையில் இருந்த மதுசூதனனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

அவரை வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மது சூதனனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இந்த விவகாரம் தொடர்பாக குடவாசல் பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கோடை வெயிலில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தமிழக அரசு அறிவுறுத்தல்!

PREV
click me!

Recommended Stories

சீமான் பேச்சை காப்பியடித்தாரா விஜய்?.. ஆதாரங்களை அடுக்கும் 'தம்பிகள்'.. இணையத்தில் மோதல்!
என் வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சி..! தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு!