பஜாஜ் முதல் ஹரோ வரை.. இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் பைக்குகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ!

First Published Mar 7, 2024, 5:14 PM IST

Mileage Bikes : என்னதான் பெரிய தொகை கொடுத்து சூப்பர் பைக்குகளை வாங்கினாலும் பெருவாரியான மக்கள் ஆசைப்படுவது மைலேஜ் அதிக அளவில் தரும் பைக்குகளை மட்டும் தான்.

Bajaj Platina

அந்த வகையில் பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக் பல ஆண்டுகளாக சிறந்த மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. சுமார் 70,000 ரூபாய் மதிப்பில் விற்பனையாகும் இந்த பைக் 1 லிட்டருக்கு சுமார் 70 முதல் 90 கிலோமீட்டர் மைலேஜ் தரும்.

140 கி.மீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இவ்வளவுதான் விலையா.. ஸ்கூட்டர் வாங்க நல்ல நேரம்..

TVS Sport

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட் வகை வண்டிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பைக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. 60,000 முதல் விற்பனையில் உள்ள இந்த பைக்குகள் 68 முதல் 75 கிலோமீட்டர் வரை நல்ல மைலேஜ் தரும் என்றும் கூறப்படுகிறது. 

Hero Splendor Plus

அதே போல ஹீரோ நிறுவனத்தின் மிகவும் விரும்பப்படும் பைக்குகளில் ஒன்று தான் ஸ்ப்லெண்டோர் பிளஸ், ஹீரோ நிறுவனத்தை பொறுத்தவரை அதிக அளவில் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகவும் இது இருந்து வருகின்றது. சுமார் 90,000 என்ற விலையில் விற்பனையாகி வரும் இந்த பைக், 70 முதல் 82 கிலோமீட்டர் வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மைலேஜ் தருகின்றது. 

Hero Passion Plus

அதே போல ஹீரோ நிறுவனத்தின் Passion Plus என்ற மாடல் பைக் நல்ல மைலேஜ் தருவதாக அதை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். 77,000 ரூபாய் முதல் விற்பனையில் உள்ள இந்த வண்டி சுமார் 70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது.

130 கிமீ தூரம் பயணிக்கலாம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. ரைடர்களுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது..

click me!