இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர் இளையராஜாவை மறைமுகமாக சாடி உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
காப்புரிமை விவகாரம்
இசைஞானி இளையராஜா அண்மையில் பாடல் காப்புரிமை வழக்கு ஒன்றி, பாடல் இசையமைப்பாளருக்கு தான் சொந்தம் என்று வாதிட்டது பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதையடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைரமுத்து ஒரு பட விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், ஒரு பாடலுக்கு இசை எவ்வளவு பெரியதோ வரிகளும் அவ்வளவு பெரியது, இதைப்பற்றி புரிந்தவன் ஞானி, புரியாதவன் அஞ்ஞானி என இளையராஜாவை தாக்கி பேசி இருந்தார்.
வைரமுத்து vs இளையராஜா
வைரமுத்துவின் பேச்சால் கடுப்பான கங்கை அமரன், அவருக்கு நேரடியாகவே வார்னிங் கொடுத்தார். இனி இளையராஜாவை தாக்கி பேசினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் கறாராக பேசி இருந்தார். இப்படி காப்புரிமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், அண்மையில் இதுபற்றி பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், பாடலின் காப்புரிமை இசையமைப்பாளருக்கோ, பாடலாசிரியருக்கோ சொந்தமில்லை, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம் என்று தன் பங்கிற்கு ஒரு குண்டை தூக்கிப் போட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... Money In The Bank : பாலைவன மணலில் மாஸாக ஒரு பாடல்.. மிரட்டும் யுவனின் Independent Music Album - வைரல் வீடியோ!
ஏ.ஆர்.ரகுமான் பதிவு வைரல்
இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அது இளையராஜாவை மறைமுகமாக தாக்கி அவர் பதிவிட்டுள்ளதாக ஒப்பிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் மறைந்த நடிகர் குமரிமுத்து நாலடியாரில் உள்ள வரிகளைப் பற்றி அழகிய தமிழில் பேசி இருக்கிறார். இதை ‘சில கற்றார் பேச்சும் இனிமையே' என்கிற வரிகளுடன் ஷேர் செய்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
இளையராஜா தாக்கப்பட்டாரா?
அந்த வீடியோவில், பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம் என்கிற வரிகள் இடம்பெற்றுள்ளது. அதற்கு ரொம்ப படித்துவிட்டோம் என தற்புகழ வேண்டாம் என்று பொருள். இந்த வரிகள் இளையராஜாவை தாக்கும் விதமாக உள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். சிலரோ இளையராஜா தாக்கப்பட்டாரா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு படு வைரலாகி வருகிறது.
சில கற்றார் பேச்சும் இனிமையே https://t.co/hGjXm33obk via
— A.R.Rahman (@arrahman)இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் செல்லும் அரண்மனை 4... கோடி கோடியாய் குவியும் வசூல்; 3 நாளில் இம்புட்டு கலெக்ஷனா?