
சென்னை பல்லாவரத்தில் பிறந்து இன்று இந்திய திரையுலகமே வியந்து போற்றும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து திரை உலகில் அறிமுகமானார் சமந்தா.
இன்று தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என்று இந்திய மொழிகள் பலவற்றில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார். இறுதியாக தெலுங்கு மொழியில் வெளியான "சகுந்தலம்" மற்றும் "குஷி" ஆகிய இரு திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சமந்தா தற்பொழுது "பங்காரம்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைக் கொண்டு சமந்தா தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியிலும் தெலுங்கு மொழியிலும் சமந்தாவிற்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமைப்பொழுதும் உண்டு. குறிப்பாக அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போன நேரத்தில் அவருக்காக அவருடைய ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தித்துக் கொண்டதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இணையத்தில் புயலை கிளப்பும் வகையில் நடிகை சமந்தா தனது நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பதிவில் வெளியிட்டதாகவும், ஒரு சில வினாடிகளில் அதை அவர் டெலிட் செய்து விட்டதாகவும் நெட்டிசன்கள் பலர் சில மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை பகிர்ந்து பெரும் புயலை கிளப்பினர். இந்த சூழ்நிலையில் வெளியான அந்த புகைப்படம் போலியானது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகை ரஷ்மிகாவின் டீ பேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் புயலை கிளப்பியது.
மேலும் நடிகை சமந்தா தனக்கு உள்ள உடல் உபாதைக்கு பிரத்தியேக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதை தான் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். வேறு எந்தவித புகைப்படத்தையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.