Ceiling Fan Slow ஆக சுத்துகிறதா..? வெறும் ரூ.70 மட்டும் போதும் வேகம் அதிகரிக்கும்!

First Published Apr 13, 2024, 11:38 AM IST

கோடையில் ஃபேன் வேகம் படிப்படியாகக் குறைந்தால் அவற்றின் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
 

இந்த கோடையில் ஃபேன் இல்லாமல் இருக்கவே முடியாது. இன்னும் சொல்ல போனால்  சிலரது வீடுகளில் ஏசி அல்லது ஏர் கூலர் கூட இல்லாமல் இருக்கும். ஆனால் ஃபேன் இல்லாமல் இருப்பதில்லை. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா.. குளிர்காலத்தில் சீலிங் ஃபேன் வேகமாக சுத்தும், ஆனால் கோடையில் அப்படி இல்லை. ரொம்பவே குறைவாக தான் சுத்தும். கடும் வெப்பத்தில் ஃபேன் வேகமாக ஓடவில்லை என்றால், அது பெரிய பிரச்னை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதன் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்யுங்கள்: ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்யும் முன் ஃபேன் ஸ்விட்சை ஆஃப் பண்ண வேண்டும். பிறகு ஃபேன் பிளேடுகளை உலர்ந்த துணியால் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் ஈரத்துணியால் சுத்தம் செய்ய செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள், முதலில் ஈரமான துணியைக் கொண்டு ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்தால், அனைத்து தூசிகளும் ஃபேன் பிளேடுகளில் ஒட்டிக்கொள்ளும். இதனால் அவற்றை சரியாக சுத்தம் செய்ய முடியாது.

ஃபேன் மின்தேக்கியை (condenser) மாற்றவும்: ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்தும் ஒழுங்காக ஓடவில்லை என்றால்,  உண்மையான பிரச்சனை மின்தேக்கியில் தான் இருக்கு.. இவற்றை மாற்றுவதன் ஃபேன் வேகம் அதிகரிக்கும். பொதுவாக மின்தேக்கியின் விலை ரூ.70 - 80 வரை தான் இருக்கும். 

இதையும் படிங்க:  Cleaning Tips : சீலிங் ஃபேனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ் இதோ..!!

மேலும் இவற்றை மாற்றுவது அவ்வளவு கடினம் அல்ல என்றாலும். அதை நீங்களே மாற்றலாம். பழையதை அகற்றும்போது அதன் நிலையைச் சரிபார்த்து, நீங்கள் மாற்றவும். நீங்கள் இதை மாற்றும் போது ஃபேன் வேகம் அதிகரிக்கும் மற்றும் அறை முழுவதும் காற்று சுழற்சி அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!