Nelson : தளபதி 69ஐ நான் டைரக்ட் பண்ணா.. அந்த 3 ஹீரோஸ் கண்டிப்பா படத்தில் இருப்பாங்க - நெல்சன் ஓபன் டாக்!

First Published Apr 26, 2024, 11:24 AM IST

Nelson Dilipkumar : ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளார். தலைவர் 171 பட பணிகள் முடிந்தவுடன் ஜெயிலர் 2 பட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nelson

தமிழ் திரை உலகில் "கோலமாவு கோகிலா" என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனராக களம் இறங்கியவர் தான் நெல்சன் திலிப் குமார். அவருடைய இயக்கத்தில் வெகு சில திரைப்படங்களே வெளியாகி உள்ளது என்றாலும் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக அவர் மாறியுள்ளார்.

Aavesham : 100 கோடி வசூல் அள்ளிய பகத் பாசிலின் ஆவேஷம்... அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? எப்போ ரிலீஸ் தெரியுமா?

Jailer 2

ஏற்கனவே தளபதி விஜயை வைத்து "பீஸ்ட்" என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்து அவர் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து "ஜெயிலர்" என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். உலக அளவில் 640 கோடி ரூபாய் வசூல் செய்தது அந்த படம். இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy 69 Cast

இந்நிலையில் தளபதி 69 திரைப்படம் குறித்து நெல்சனிடம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது, தனக்கு தளபதி 69 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக அந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகிய மூவரை நடிக்க வைக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

தாய்லாந்துக்கு ஒரு ஜாலி ட்ரிப்.. குட்டி யானையுடன் கொஞ்சி விளையாடிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடியின் Cute கிளிக்ஸ்

click me!