லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) / ஜூனியர் செக்ரெட்ரியேட் அசிஸ்டெண்ட் (JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ‘A’ ஆகிய பணிகளில் மொத்தம் 3712 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மத்திய அரசில் வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள எழுத்தர், தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2024 க்குள் விண்ணப்பிக்கலாம். குறுகிய காலமே இருப்பதால் தாமதிக்காமல் உடனே விண்ணபிக்க வேண்டும்.
undefined
லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) / ஜூனியர் செக்ரெட்ரியேட் அசிஸ்டெண்ட் (JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ‘A’ ஆகிய பணிகளில் மொத்தம் 3712 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
சில பணிகள் தவிர, பெரும்பாலான பணிகளுக்கு 12ஆம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். சில பணியிடங்களுக்கு மட்டும் தகுதிகள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.08.2024 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்படுகிறது.
சம்பளம்:
எல்.டி.சி / ஜே.எஸ்.ஏ. - ரூ.19,900 - ரூ.63,200
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - ரூ.25,500 - ரூ.92,300
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ‘A’ - ரூ.25,500 - ரூ.81,100
தேர்வு முறை:
கணினி வழி தேர்வு, முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு ஆகியவை மூலம் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. SC/ST பிரிவினருக்கும் பெண்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2024
இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் தகவல்கள் அறிய https://ssc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.