நீட் தேர்வு எப்படி இருந்தது? ரிபீட்டான கேள்விகள்... எக்ஸாம் ஈஸியா இருந்துச்சு... ஆனா கெடுபிடிதான் மோசம்...

By SG Balan  |  First Published May 6, 2024, 11:46 AM IST

இந்த ஆண்டு வினாத்தாளில் முந்தைய ஆண்டுகளில் இருந்து சில கேள்விகள் அப்படியே வந்திருந்ததால் NCERT புத்தகங்களை நன்றாக படித்தவர்களுக்கு ஈசியாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.


நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்துமுடிந்த நிலையில், வினாத்தாள் குறித்து மாணவ மாணவிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தான் எளிமையாகவே இருந்தது என்று பல மாணவ மாணவிகள் கூறியுள்ளனர். என்சிஇஆர்டி (NCERT) எனப்படும் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தை நன்றாக படித்திருந்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்றும் சொல்கின்றனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் சற்று கடினமான கேள்விகள் இருந்தன என்றும் கருதுகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

வேதியியல், தாவரவியல் பாடங்களில் இருந்து வந்த கேள்விகள் எல்லாம் எளிதாக இருந்தன என்றும் மாணவர்கள் சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு கடினமாக இல்லை என்று மாணவர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக இந்த ஆண்டு வினாத்தாளில் முந்தைய ஆண்டுகளில் இருந்து சில கேள்விகள் அப்படியே வந்திருந்ததால் NCERT புத்தகங்களை நன்றாக படித்தவர்களுக்கு ஈசியாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.

TN 12th Result 2024: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

சோதனை என்ற பெயரில் அடிக்கடி விடைத்தாளை வாங்கி பார்த்துக்கொண்டே இருந்தது பெரிய தொந்தரவாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. அடிக்கடி கையெழுத்து போடவும் கை ரேகை பதியவும் கூப்பிடுவதால் தேர்வு எழுதும் நேரம் வீணாகப் போய்க்கொண்டே இருந்தது என்றும் மாணவ மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் 1.50 லட்சம் பேர்:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எம்பிபிஎஸ் - பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள்.

ஞாயிறு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த நீட் தேர்வை எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகின்றன.

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த திரூப்பூர்! மாவட்ட வாரியாக முழு விவரம்!

click me!