நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வு.. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்..

By Raghupati R  |  First Published May 5, 2024, 12:07 AM IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று (மே 5) நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.


இந்தியாவில் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு இன்று (மே 5-ம் தேதி) ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. 

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்களும், நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கின்றனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு தொடங்குகிறது.

முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் தலையில் பூ வைக்கக்கூடாது, தங்க நகை ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. மொபைல் போன் எடுத்து செல்லத்தடை, தெளிவாக தெரியும் வகையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம்.

எலெக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் எடுத்து செல்ல முடியாது. காலணி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13மொழிகளில் இந்தத் தேர்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

click me!