Top 10 Serial TRP: தடாலடியாக இருக்கே! TRP-யில் சன் டிவி சீரியலுக்கு செம்ம டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொடர்கள்!

First Published Mar 22, 2024, 2:35 PM IST

ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல், TRP-யில் டாப் 10 இடத்தை பிடிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த வருடத்தின் 11-ஆவது வாரத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல் குறித்து  இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

இந்த வாரம் 11.6 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது 'சிங்க பெண்ணே' சீரியல். அன்புவின் நல்ல மனதை புரிந்து கொண்ட ஆனந்தி, அவர்தான் அழகன் என்று தெரிய வந்தால் ஏற்றுக் கொள்வாரா? என்கிற மிகப்பெரிய கேள்வியுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் ரெஜினாவை அவருடைய பெற்றோருடன் சேர்ந்து வைக்க பல்வேறு சாகசத்தை அன்புவும் - ஆனந்தியும் நிகழ்த்தினர். எதிர்பாராத பல திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இதை தொடர்ந்து, இந்த வாரம், 10.14 TRP புள்ளிகளுடன்... இரண்டாவது இடத்தில் 'கயல்' சீரியல் உள்ளது. கயல் - எழில் திருமண கொண்டாட்டம் கூடிய விரைவில் களைகட்ட உள்ள நிலையில், அன்பு கயலுக்கு புது பிரச்சனையாக மாறியுள்ளார். தன்னுடைய தம்பிக்கு உண்மையை புரிய வைத்து... தர்மலிங்கத்தின் கெட்ட எண்ணத்தை வெளிச்சம்போட்டு காட்டுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Vichithra: கவுண்டமணியிடம் இந்த பழக்கம் இருக்கு..! இதுவரை யாரும் சொல்லாத கசப்பான சம்பவத்தை கூறிய விசித்ரா!

இந்த வாரம் மூன்றாவது இடத்தில் உள்ளது 'எதிர்நீச்சல்' தொடர். 10.1 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ள இந்த தொடரில்.... உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் மகளை திருமணம் செய்து வைக்க குணசேகரன் முடிவு செய்துள்ளார். இதற்கு எதிராக ஈஸ்வரி மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கும் நிலையில், குணசேகரன் இந்த முறையும் தன்னுடைய சவாலில் வெற்றிபெறுவாரா? ஏமாறுவாரா? என்கிற பரபரப்பான காட்சிகள் தற்போது இந்த தொடரில் இடம்பெற்று வருகிறது.

இந்த வாரம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது 'வானத்தைப்போல' தொடர்.  8.26 TRP புள்ளிகளை பெற்றுள்ளது. தன்னுடைய அண்ணன் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக கணவரை விட்டு பிரிந்து வந்துள்ள துளசி, பொன்னியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு... மீண்டும் கணவர் ராஜபாண்டியுடன் சேர்வாரா? சின்ராசு எடுக்கப் போக முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றி விறுவிறுப்பான கதைகளத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Seeman Six Pack Photo: வெறித்தனமாக ஒர்க் அவுட்..! சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக மாறிய சீமான்! வைரலாகும் போட்டோஸ்!

Iniya Serial

இதைத் தொடர்ந்து 8.35 புள்ளிகளுடன்... ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது இனியா சீரியல். இனியாவின் நாத்தனார் அக்ஷயா ஏற்கனவே ஒருவரை காதலித்து கர்ப்பமான தகவல் அனைவருக்குமே தெரிய வந்த நிலையில், அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனியா தன்னிடம் இந்த தகவலை சொல்லாமல் மறைத்து திருமணம் செய்து வைத்ததாக நினைக்கும், தன்னுடைய நண்பனுக்கு புரிய வைத்து... மீண்டும் அக்ஷயாவை அவருடைய கணவருடன் இனியா சேர்த்து வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

அதே போல் இந்த வாரம், 8 .32 TRP புள்ளிகளுடன்... 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல்.  கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டைகள் கூட அன்பின் அடித்தளம் என்பதை அடிக்கடி மீனா - முத்து ஜோடி நிரூபித்து வருகிறது. மேலும் மீனா... முத்துவுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளதால், அது ரோகிணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவோடு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

செழியனுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு! கலங்கும் பாக்கியா! எழிலுக்கு தெரிந்த வந்த உண்மை? பாக்கியலட்சுமி அப்டேட்!
 

இதை தொடர்ந்து, இதுவரை டாப் 5 பட்டியல்களில் இடம் பிடித்து வந்த 'சுந்தரி' சீரியல், தற்போது 8.22 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கார்த்தி உயிரோடு இருக்கும் விஷயம், சுந்தரிக்கு தெரிய வந்துள்ள நிலையில்... இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் சந்திப்பார்கள் என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த சீரியல் கதைக்களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந்த வாரம் 7.27 TRP புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது பாக்கியலட்சுமி சீரியல். ஜெனிக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக ஜோசப் கூறியதை தொடர்ந்து, பாக்கியலட்சுமி குடும்பமே ஆட்டம் கண்டுள்ளது. எனவேதற்போது செழியனுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. என்னினும் பெற்றோர்களின் பிடியில் இருந்து விலகி ஜெனியும், செழியனும் தங்களை காதலை உணர்ந்து ஒன்று சேர்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பர்சனல் வாழ்க்கையில் விழுந்த இடி! கேரியரை கோட்டை விட்ட.. வரலட்சுமி சரத்குமார்! அவரே கூறிய ஷாக் தகவல்!

இதைத் தொடர்ந்து 9-ஆவது இடத்தில், விஜய் டிவியின் மற்றொரு தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. இந்த வாரம் 6.36 TRP புள்ளிகளை பெற்றுள்ளது. சரவணனுக்கு ஒருபுறம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில்... மற்றொருபுறம் கதிர் - ராஜியின் ரொமான்டிக் காட்சிகளும் காட்டப்பட்டு வருகின்றன. எனவே இனி வரும் நாட்களில் சன் டிவி தொடர்களுக்கே செம்ம டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

பத்தாவது இடத்தில், 5. 84 TRP புள்ளிகளுடன் 'ஆஹா கல்யாணம்' சீரியல் உள்ளது. உண்மையான அன்புடன் சூர்யா தன்னிடம் பழகவில்லை என்கிற உண்மை தற்போது மஹாவுக்கு தெரிய வருகிறது. இதனால் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் இருந்த மகாவை, ஒரு வழியாக சமாதானம் செய்து தாத்தாவும்.. பாட்டியும்.. வீட்டிற்கு அழைக்கின்றனர். பின்னர் சூரியாவும் அதே இடத்திற்கு வருகிறார். மஹா வீட்டுக்கு வர மாட்டேன் என கூற சூர்யா கையை பிடித்து இழுத்து செல்கிறார். எனினும் மஹா மீதான காதலை உணர்ந்து அவரை ஏற்று கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!