நசாவுவில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி 2ஆம் இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது.
ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பஹாமஸ் தலைநகர் நசாவுவில் நடைபெற்றது. இதில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பங்கேற்று 2ஆம் இடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில், ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேஷன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் முகமது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் தகுதிச் சுற்றில் 2ஆம் இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். இதே போன்று மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில், எம்.ஆர். பூவம்மா, சுபா வெங்கடேஷன், ரூபல் சௌத்ரி, ஜோதிகா ஸ்ரீ தண்டி ஆகியோர் இடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.