சிவகார்த்திகேயனை கைது செய்யனும்... அமரன் படத்தால் வெடித்த புது பிரச்சனை - சிக்கலில் SK

First Published Feb 22, 2024, 9:32 AM IST

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Amaran

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். இப்படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். அமரன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

Amaran Movie Team

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் செய்யப்பட்டது. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த டீசர் யூடியூப்பில் டிரெண்டாகி வரும் நிலையில், அதில் சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறி அப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... "இது என் தங்கச்சி".. ரசிகைக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. கண்கலங்கி நின்ற சூப்பர் சிங்கர் - Video!

Amaran Movie Sivakarthikeyan

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமரன் பட ஹீரோ சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், அதன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரை கைது செய்யக்கோரி கண்டனக் குரல்களும் எழுப்பப்பட்டன. அதுமட்டுமின்றி அவர்களது உருவ பொம்மையை சாலையில் எரிக்க முயன்றுள்ளனர். இதனை தடுத்த போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர். இதனால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.

Amaran Movie Issue

அமரன் டீசரில் காஷ்மீர் மக்களையும், இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி ஒற்றுமையாக வாழும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே பகையை உண்டாக்கும் வண்ணம் அப்படத்தின் காட்சிகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அமரன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... ஒரு நிமிடத்திற்கு ரூ.4.5 கோடி சம்பளம் வாங்கிய உச்ச நடிகர்.. அதுவும் கேமியோ ரோலுக்காக.. யார் தெரியுமா?

click me!