Director Sundar C : ஹீரோஸ் யாருன்னு தெரியும்.. ஆனா ஹீரோயின் யாருனு தெரியுமா? கசிந்த கலகலப்பு 3ன் ரகசியம்!

First Published May 23, 2024, 6:24 PM IST

Kalakalapu 3 : அரண்மனை 4 திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனர் சுந்தர் சி விரைவில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

Kalakalapu

தமிழ் சினிமாவில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான "முறை மாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் சுந்தர் சி. கோலிவுட் உலகின் கமர்சியல் கிங் என்றால் அது இவர்தான், இவருடைய இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கலகலப்பு.

"நான் அதிகமா கவலைப்படுறதே இந்த விஷயத்துக்காக தான்..” மகள் குறித்து மனம்திறந்த நடிகர் ராமராஜன்..

Kalakalapu 2

சந்தானம், விமல், சிவா, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து மெகா ஹிட் ஆன அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா மற்றும் ஜெய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

aranmanai 4

அதேபோல அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்களை ஏற்கனவே இயக்கி இருந்த இயக்குனர் சுந்தர் சி தற்பொழுது அப்படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி அதை மெகா ஹிட் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். இவ்வாண்டு கோலிவுட் உலகத்திற்கு கிடைத்த முதல் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த திரைப்படமாக அரண்மனை 4 திரைப்படம் திகழ்ந்து வருகின்றது. 

vani bhojan

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்ற சுந்தர் சி-யிடம் வீடியோ மூலம் மிர்ச்சி சிவா மற்றும் விமல் ஆகியோர் பேசினர். அப்பொழுது கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவலை அவர்கள் வெளியிட்டனர். அதற்கு பதில் அளித்த சுந்தர் சி, இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பதையாவது ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இப்படத்தில் வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Harish Kalyan : அட்ரா சக்க.. ஹரிஷ் கல்யாணின் "PARKING" படம்.. ஆஸ்கரில் கிடைத்த அங்கீகாரம் - குஷியில் படக்குழு!

Latest Videos

click me!