- Home
- Gallery
- Harish Kalyan : அட்ரா சக்க.. ஹரிஷ் கல்யாணின் "PARKING" படம்.. ஆஸ்கரில் கிடைத்த அங்கீகாரம் - குஷியில் படக்குழு!
Harish Kalyan : அட்ரா சக்க.. ஹரிஷ் கல்யாணின் "PARKING" படம்.. ஆஸ்கரில் கிடைத்த அங்கீகாரம் - குஷியில் படக்குழு!
Parking Movie : இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் பார்க்கிங். அந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Parking Movie
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பார்க்கிங்.

Harish Kalyan
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒரு வீட்டில் வசிக்கும் இருவருக்கு இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை இந்த திரைப்படம் பிரதிபலித்தது.
Parking
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தற்பொழுது புதியதொரு பன்னாட்டு அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. "ஆஸ்கர் லைப்ரரி" அமைப்பு, "பார்க்கிங்" திரைப்பட கதையை தங்களது நூலகத்தில் இப்பொழுது இணைத்துள்ளது.
Parking Movie in Oscar
உலக அளவில் சிறந்த திரைக்கதையோ, அல்லது சிறந்த காட்சி அமைப்போ மக்களை அதிகம் ஈர்க்கும் பட்சத்தில், அதை காலம் கடந்து பாதுகாக்க ஆஸ்கர் நிறுவனம் அதை தங்கள் லைப்ரரியில் பாதுகாத்து வைப்பது வழக்கமான ஒன்று. பிற சினிமா ஆர்வலர்களுக்கு இது ஒரு Reference Materialலாக பயன்படும்.