கள்ளச்சாராயத்துக்கு பயந்தேனா? வீண் வதந்தி பரப்ப வேண்டாம்.. முன்னாள் கள்ளக்குறிச்சி SP வார்னிங்! வீடியோ!

Jun 21, 2024, 9:33 PM IST

கள்ளக்குறிச்சியில் இப்போது நடந்து வரும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருனாபுரம் என்கின்ற இடத்தில் கள்ளச்சாராயம் உட்கொண்ட, பெண்கள் உட்பட 49 பேர் இறந்த சம்பவம் தமிழகத்தையே இப்போது சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. திமுக அரசு இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த எஸ்.பி மோகன்ராஜ் அவர்கள், கள்ளச்சாராயத்திற்கு பயந்து தான் விருப்ப ஓய்வு பெற்று சென்றதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற முன்னாள் கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ் வெளியிட்ட அந்த பதிவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய மகனின் பிரசவத்திற்காக தான், அமெரிக்கா செல்வதற்காக விருப்ப ஓய்வு பெற்றதாக கூறியுள்ளார். 

ஆனால் தற்பொழுது கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் துயர சம்பவத்தை ஒப்பிட்டு, தான் கள்ளச்சாராயத்திற்கு பயந்து தான் விருப்பு ஓய்வு பெற்றதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருவதாகவும் அவர் கூறினார். இப்படி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.