அடக்கடவுளே.. இதுக்கலாமா அம்மாவையும் தம்பியும் கொலை பண்ணுவாங்க.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

By vinoth kumar  |  First Published Jun 22, 2024, 10:42 AM IST

சென்னை திருவொற்றியூர் திருநகர் 1 வது தெருவைச் சேர்ந்த பத்மா (45). அக்குபஞ்சர் மருத்துவர். இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிதிஷ் (20) மற்றும் சஞ்சய்  (14) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.


சென்னையில் தாய், தம்பியைக் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துவிட்டு தப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை திருவொற்றியூர் திருநகர் 1 வது தெருவைச் சேர்ந்த பத்மா (45). அக்குபஞ்சர் மருத்துவர். இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிதிஷ் (20) மற்றும் சஞ்சய்  (14) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நிதிஷ் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவரின் 2வது மகன் சஞ்சய் 10ம் வகுப்பு படித்து வந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் இன்னமும் அடங்காத மரண ஓலம்.. நேரத்திற்கு நேரம் எகிறும் பலி எண்ணிக்கை! 21 பேர் கவலைக்கிடம்!

இந்நிலையில், நிதிஷ் தனது தாய் பத்மா மற்றும் தம்பி சஞ்சய் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு இருவரின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நிதிஷ் அம்மாவையும் தம்பியையும் தான் கொலை செய்து விட்டதாக வாய்ஸ் மெசேஜை உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். மேலும் தன்னை தேட வேண்டாம் தானும் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நண்பனை வீட்டில் விட்டது தப்பா போச்சு.. மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்! தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்த கொடூரம்

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர் மகாலட்சுமி பத்மாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நிதிஷை தேடி வந்தனர். அப்போது  குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் பதுங்கி இருந்தத அவரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அரியர் இருந்ததை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.  

click me!